பரவாசுதேவன் பணித்தார் எனப்பாரின்மேல் வந்தார்
பூதலத்தார் பொறைதீர பூதூரில் பிறந்தார் வந்தார்
அரவரசன் அனந்தன் என்பார் அங்குற்றிங்கு வந்தார்
ஆளவந்தார் அருள்விழிக்கு இலக்காகி உலகாள வந்தார்
கரிகிரிமேல் கண்ணாளர் ஆதரித்தன்பு செய்வார் வந்தார்
காசினியோர்க்கு ''மால்தேய்வம்'' எனக்காட்டவே வந்தார்
திருவரங்கம் திருப்பதி சேர்ந்தினிது இருபார் வந்தார்
திருமால் திருவடிக்கெமை சேர்விப்பார் வந்தார் தாமே!
-K S Srinivasan.

No comments:
Post a Comment