Friday, July 31, 2015

அருளாளனும், ஆளவந்தாரும் :

 

யஸ்ய ப்ரஸாத கலையா பதிர: ஸ்ருணோதி பங்கு: ப்ரதாவதி ஜவேன வக்தி ச மூக: |
அந்த: ப்ரபச்யதி சுதம் லபதே ச வந்த்யா தம் தேவமேவ வரதம் சரணம் கதோஸ்மி ||

எந்த தேவப்பெருமாளின் அருளால் செவிடனுக்கு காது கேட்குமோ, நொண்டியானவன் நடப்பானோ, ஊமை பேசுவானோ, கண்ணிழந்தவன் பார்ப்பனோ, பிள்ளை பெறாதவள் பிள்ளை பெறுவளோ, அந்த தேவப்பெருமாளை நான் சரணம் அடைகிறேன் என்பது ஆளவந்தாரின் இந்த ஸ்லோகத்தின் திரண்ட கருத்து.

அதன் தமிழாக்கம் =>

வரதநின் கண்வீச்சு ஒன்றே தருமே
இரப்ப! செவிடன் கேட்கும் -- பரந்த
உலகிதில் மூகன் மொழியும் குருடன்
துலங்கக்காண் சேயாம் மலடு.

--கி. ஸ்ரீ. ஸ்ரீ.

இந்த ஸ்லோகத்தின் காட்டப்பட்ட அத்தனை விஷேஷனங்களும் ஸ்ரீ ராமானுஜரை குறிப்பதாக அமைந்திருப்பதை உணரலாம் என்று இதன் உண்மையான தாத்பர்யத்தை நம் ஆசார்யர்களும் பெரியவர்களும் கட்டயுள்ளனர்.
யார் தேவயற்ற வார்த்தைகளை கேட்கிறார்களோ அவர்கள் செவிடர்களுக்கு சமம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஸ்ரீ ராமானுஜர் கேட்ககூடாத அத்வைத மத பிரசங்கங்களை கேட்டுக் கொண்டிருந்த படியால் சத் சம்பிரதாய விஷயங்களை கேட்கும் வரை அவர் ஆளவந்தாருக்கு செவிடனாகவே தெரிந்தார். அவர் சத் சம்பிரதாயத்தின் ஆழ்பொருளை கேட்கவேண்டும் என்பது முதல் ப்ரார்த்தனை.

ராமானுஜர் ஒரே இடத்தில் இல்லமால் ஸ்ரீரங்கம் கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்ஷ்யாத்ரி சிம்மாசலம் என்று சொல்லும் படி எழுந்தருளி எல்லா திவ்யதேசங்களையும் மங்களாசாசனம் செய்ய வேண்டும் என்பது அடுத்த ப்ரார்த்தனை.

ராமானுஜர் ஊமை போலல்லாமல் வேதாந்த விஷயங்களையும் திருவாய்மொழி பொருள்களையும்விரித்து உரைக்க வேண்டும் என்பது அடுத்த ப்ரார்த்தனை.

ராமானுஜர் தன்னுடைய ஞானகண்ணால் வேதாந்த விஷயங்களை விசாரம் செய்து ஸ்ரீபாஷ்யாதி க்ரந்தங்கள் இயற்ற வேண்டும் எம்பது அடுத்த ப்ரார்த்தனை.

ஸ்ரீ ராமானுஜர் தனி ஒருவராக அல்லாமல் நிறைய சிஷ்யர்களை(சிஷ்யர்களாகிர பிள்ளைகளை) உருவாக்க வேண்டும் என்று இத்தனை விஷயங்களை சூக்ஷுமமாக ப்ரார்த்தித்தார்.

தேவப்பெருமாள் "வரம் தரும் மாமணிவண்ணன்" என்பதாலும் "பேரருளாளன்" என்பதாலும் ஆளவந்தாரின் ப்ரார்த்தனைகளை அப்படியே நிறைவேற்றி ஸ்ரீ ராமானுஜரை நம் சம்பிரதாய ப்ரவர்த்தகா சார்யராக ஆக்கியருளினார். ஆக, எம்பெருமானாருக்கு இவ்வளவு பெருமைகள் வாய்த்ததற்கு பேரருளாளனும் ஆளவந்தாருமே காரணம் எனலாம்.

-- Courtesy : Geethaacharyan Spiritual Magazine.
 

 

Monday, July 27, 2015

யாதவ சிம்மமும் நரசிம்மனும்.




பக்தன் அழைப்ப  பிளந்தபாரை போந்தவன்
பார்த்தன் பிழைத்தனாய் தேரைநன் -- கூர்ந்தவன்
என்றிவர் தாம்அல்லிக் கேணிக்கு நின்றவர்
நிற்றதூம் ஓயா துளத்து.

-- கி. ஸ்ரீ. ஸ்ரீ.

Photo Courtesy : Shankar Ramakrishnan Iyer.

ஆழிப்படையானுக்கு வாழி.




Photo courtesy : Vijayaraghavan Ke.

வாழி! வாழி! ஆழி அண்ணரே!
ஏழை எம்மை காப்பீர் நீரே!
தோழமைக் கொள்ள சூழுமென் எண்ணம்!
நாழிகை நில்லாது ஏங்குமவ் வண்ணம்!


மாலவன் கையில் நாளும் துலங்கும்
கோல வண்ண ஆழி அண்ணா!
மேலும் மேலும் எந்தன் எண்ணம்
மாலின் பாலே குழைய உதவீரே !


தீக்கொளச் சுழலும் சக்கரத்து ஐய!
மாக்களாய் விலக்காது மங்களம் செய்வாய்!
ஆக்கை முழுதம் இழிதல் திரித்து
நோக்கும் எம்மை முமைசால் மீட்டே!


திக்கு நிறைப் புகழாளா! தேவா!
அக்கரை உமக்கும் இதுகொல் ஆகாதா?
சக்கர நல்வடி வழகா! சாமா!
எக்காளம் ஊதி ஏற்றுகேன்! அருளுமம்மா!


சங்கர் ஐயர்நும் தோழர் ! தாங்குமால்
மங்கள முடியும் தோளும் எல்லாம்
திங்கள்வெண் பரிதிவான் திசையுமாம் ! திகிரி
எங்கோ!அம் மாலடிமை நும்போல் நல்குதிரே!

--கி. ஸ்ரீர. ஸ்ரீ.









Sunday, July 26, 2015

கருளப் பெருமாள்.


Photo courtesy: Internet.

 

வைனதேயம் வர புஜ வரதம் பட்சிராஜம் பஜே !

தீனஜன சுக்ருதம் தேவகுல ஜாதம் யதாஸ்வயம்  !!

மன்யே தவ நிஜ ரூபம் விஷ்ணு போதம் ! வரதாயகம் !

தன்ய தன்ய ப்ரசீத மம ! அம்ருத பாஜனம் ப்ரபும் !!

  

Wednesday, July 22, 2015

எதிராசரும் - கூரேசரும் .


அர்வாஞ்சோ யத் பத ஸரஸிஜ த்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு: |
ஸோயம் ராமாநுஜ முநிர் அபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாத் அமநுத கதம் வர்ண்யதே கூரநாத: ||

என்று ஒரு பூர்வாசார்ய ஸ்லோகம். 


Photo courtesy  : Geethacharyan Magazine.


அதன் தமிழாக்கம் =>

பின்நுற்றார் மோக்கம் எதிராசா! நின்சரண்
என்றிருப்பார்!, அற்றே முடிகூட -- முன்நுற்றார்
உய்வதூம்! அத்தலைக்கு ஆழ்வான் உறவதாக
ஐயஉண்டோ கூரேசர்க் கொப்பு?



 நம் சம்பிரதாயத்தில் எம்பெருமானாருக்கு பிற்பட்ட(காலத்தால்) ஆசார்யர்கள் அவர் திருவடி சம்பந்தத்தினால் உயர்ந்த பேற்றை(முக்தி) அடைந்தார்கள். எம்பெருமானாருக்கு முற்பட்ட ஆசார்யர்கள் அவர் திருமுடி சம்பந்தத்தினால் முக்தி அடைந்தார்கள். ஆனால் உடையவரோ தாம் ஆழ்வானின் சம்பந்தம் பெற்றதனால் தான் தமக்கு உயர்ந்த பேறு கிடைத்து என்று உறுதி கொண்டிருந்தார். அப்படிப்பட்ட வைபவம் வாய்ந்த ஆழ்வானின் பெருமையை நாம் எப்படி சொல்லி முடிக்க முடியும் என்பது.

Monday, July 20, 2015

ஆண்டாளும் வரதனும்.

 

Photo Courtesy : Kesavabhayam Vn .

அரங்கன் உகந்தாளை வண்கையார் கச்சி
வரதன் உகக்கும்! இருவர்க்கும் -- சேர
எதிராசர் தாமுகப்பாம் ! என்றால் சிபாரிசு
எதிராசர் தாமன்றி யார்?

Sunday, July 19, 2015

நக்ஷத்திர மந்திர மாலிகா.

நக்ஷத்திர மந்திர மாலிகா.

** உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.
""""""""""""""""""""
* ""அஸ்வினி 
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே 
சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
* ""பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே 
தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்
* ""கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே 
மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
* ""ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே 
விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்
* ""மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே 
மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
* ""திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே 
பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்
* ""புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே 
அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
* ""பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே 
மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
*"" ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
* ""மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே
 பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்
*"" பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே
 பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்
* ""உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே 
மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்
* ""அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே 
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்
* ""சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
 ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்
* ""சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே 
மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
* ""விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே 
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்
* ""அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே
 மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்
* ""கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே 
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
* ""மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே 
மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
*"" பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே 
மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்
* உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
 மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்
* திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே 
புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
* 👉அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே 
வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
* 👉சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே 
வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
* 👉பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே 
அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
*👉 உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே 
ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
* 👉ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே
 பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்...

 The following is the list of Nakshathras and the sets of  விஷ்ணு சஹஸ்ர  நாம ஸ்லோகம்  - consisting one Sloka for each Pada  of 4 Padas in a Nakshtra :

1) Ashwini - 1-4
2) Bharani - 5-8
3) Kruttika - 9-12
4) Rohini - 13-16
5) Mrugasira - 17-20

6) Ardra - 21-24
7) Punarvasu - 25-28
8) Pushyami - 29-32
9) Aaslesha - 33-36
10) Magha - 37-40

11) Purva Phalguni - 41-44
12) Uttara Phalguni - 45-48
13) Hasta - 49-52
14) Chitra - 53-56
15) Swati - 57-60

16) Vishakha - 61-64
17) Anuradha - 65-68
18) Jyeshttha - 69-72
19) Moola -73-76
20) Purva Ashaadha - 77-80

21) Uttara Ashaadha - 81-84
22) Sravanam 85-88
23) Dhanishttha - 89-92
24) Shathabhisham - 93-96
25) Purva Bhaadrapada - 97-100
26) Uttara Bhaadrapada - 101-104
27) Revati - 105-108.


Compilation Courtesy : Mandayam Sabha, Bangalore.

Friday, July 17, 2015

நாலு கவிப்பெருமாள் !


திருமங்கை மன்னன்-குமுதவள்ளி நாச்சியார் (திருநகரி)

With due apologies to Elders and the Prabanda Gayakas, I give herewith the first half of the 108 Periya Thirumozhi Paasurms in the form of one Paasuram for each Decads, the same commencing and ending with similar Syllables as that of Alwar's Thirumozhi Pathigam. This work no doubt is an overact by an under-dog calling for the sympathy of the Lord with empathy. Let me not elaborate further the usefulness of this work but leave it to the viewers considered judgement and appraisal. 

The 2nd half is in its making and God Willing it will follow as soon as completed as Blog-2 under the same head:

Please forgive me for any of the errors that may have crept in unintended out of exuberance and poetic frenzy and perhaps due to rhythmic compulsions or otherwise of their meaning, purport or grammar.

Now it is all yours =>

ஆழ்வார் பரிகரம் :

நாலு கவிப்பெருமாள் ! ஆறு பனுவல்கள்
ஏலு புவிப்பெருமாள்! ஐவராம் ! -- தோலா
வழக்கன் !தா ளூதுவான் ! ! நீர்மேல் நடப்பான் !
நிழலில் ஒதுங்குவான் ! சேர்ந்து.


பெரிய திருமந்திரத்தின் பெருமையால் ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகிறார் :


வாடிய தம்முயிரை வெய்யிலின் வாங்கி, நல்
தொடையல்சேர் நாரா யணநாமம் -- கூடிய
நிழலில் உலர்த்தும் கலிகன்றி பூந்தாள்
நிழலவையே தஞ்சம் நமக்கு.


வாலி ஒருவன் வலிவாங்கி வானவர்க்குச்  
சிலையதால் கூலிசெய் மாலவன்  -- பொலிந்த
பிரிதிசேர் ஒண்மலை தண்இம யத்து
அருவினை எங்கடைவ தே?


 முற்றத்  தளர்வுற்று மூப்பு முனையாமுன்
சுற்றத் தவர்பால் நீர் கற்றபாசம் -- அற்று
வதரி நெடுமாலை மங்கையார் வேந்தன்
உதவஉறு மாட்சி விசும்பு.


ஏன முனாகி எடுத்த நிலமிசை
தானவன் பொன்றத் தடிந்தவன்   -- ஆனநம்
தாசரதி தோய்வதரி யாச்சிரா மத்து
இசைய இமையவர் ஆம்.


கலையும் கரியும் பரியும் திரியும்
மலையும் உளசா ளக்கிராமம் -- மேலா
நிலவும் சுடரும் இருளுமாய் நிற்றான்
அலமரவன்  நாமம் பிதற்று.


வாணிலா மௌவல் மடந்தையர் போகமே
பேணி வினைப்பயன் ஏதம்வந் -- அணுகலா
வண்ணம் இறைஞ்சும் நிமிசார ணியத்தானைத் 
திண்ணம்! அவ்  வும்பராள்கை உய்த்து.


அங்கண்தீ பொங்க அவுணன்வாள் மங்கவே
அங்கொருநாள் ஆளரியாய் நிற்றதும்  -- சிங்கவேள்
குன்றத்தே!  நம்மனை! நாம்தொழுது ஏற்றுகேன் !
ஒன்றும்தீ தில்லை முயற்று.


கொங்குயர் கோடுடை வேங்கடம் தாமுடை
மங்கை மகிழ்ந்துறை மார்பினன்! -- எங்களீசன் !
எம்பெருமான் நாளும் திளைக்குமிடம் தஞ்சமதா;
இம்மண்ணும் வானுலகும் ஆள்!.


தாய்தந்தை தாரம் கிளைமக்கள் என்னிவர்
வாய்ப்பட்டு என்னே உழன்றேன்!ஊன்  -- நோய்ப்பட்டு
உன்னை மறந்தேன்! தண் வேங்கடவா! நீஎந்தன்
முன்னை அகமில்லாது ஓர்.


கண்ணார் திருவேங் கடம்குடிக் கொள்கோவே!
விண்ணும்இம் மண்ணும் தொழநின்றாய்! -- அண்ணா!
களியானை வல்லான் கலியன் பனுவல்
தெளிவார்! அமரராவர் தாம்!


- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

இரண்டாம் பத்து =>

திருவேங்கடம் - 4/4

வானவர் மாதவர் என்னிவர் புந்தியுள்
ஆன அருக்கன் அமர்வர்தாம்  -- மானவரை
ஆட்கொண்டு போய்விசும் பேற வியற்றுவார்த்   
தாட்கடிமை பூணிடமாம் வான்!


காசையார் மோகவார்த்தை மூவா முயறுவார்
நாசமாக நம்பவைக்க  கள்ளவேடம்  -- கூசமிலாது
ஏலுவார் ஏகுமிடம் எவ்வுள் எனஉழல்வார்க் 
கேலுமிடம் வானுல கே!


திருவல்லிக் கேணி :

விற்தோள் விசயன் தனிப்பாகன்! பூங்கேணி 
பொற்பாவை நாகணை நம்பிரான்! -- கற்றூண்
கரந்தெதிர்ந்தான் என்றிவரும்  நாகவரன் காவப்
துரகம்சீர்ந்த் தார்குய்ந்தார்  வான்!


அன்றாயர் கோன்குலக் கோதைக்  கொடியொடும்
மென்மலர்ப் பாவையள் தன்னொடும் -- நின்றான்
ஒருவர்க் கிடம்நீர் மலையே! அரிதோ  
இரும்மன்னர் ஆகல் அடி!


பாராய துண்ட பரமன் ! படிகடந்து
வேறாய தாளன் !  கரா -- இருகூரா
அதக்கழித்து மல்லை தலசயனம் சேர்ப்பார் !
அகம்முற்ற முன்அரிவர் தாம்.


திருக்கடல் மலை - 2/2 :

நண்ணா அவுணர்தம்  வாணாள்நா ளும்மங்க
பெண்ணாகி வானவர்க்கு வானமுதம் -- ''உண்பித்தான்
தன்னை நினைவார்எம் நாயகரே'' என்றவர்
மன்கலியன் நம்மின் முதல்.


தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை கண்டு தாய் இறங்கிப் பேசும் பாசுரம் :

திவளும் மதிமுகத்தள் எம்மோய் உனக்காய் 
அவாவும் நனிநல்கி என்பயந்தாள்? -- மேவித் 
திடம்சேர்த் திருவாளா ! நீஇவளை என்செய்
துடன்பாற் றுவையோ வினை?


திரிபுரம்  மூன்று எரித்தானாய் ஆக்கைப் 
புரிகரம் எட்டுடையோய்! நான்முகனார்  --  தேர்வரம்
விஞ்சத் தருவாய்! என்மகள்  யாரிவர் ? என்றஞ்சல்
நெஞ்சத் திடம்வைப்பாய் என்?


சொல்பொருள் தானவையாய் சுவைஒளி நாற்றமுமாய்
நல்லரன்  நான்முகன் நாரணர்க்குச்  -- செல்லிடம்
தென்னவர்  பல்லவன் பார்மேல் பரமேச்சர
விண்ணகர் சூழத் திகழ்ந்து.


மஞ்சாடி  நீர்கொழிப்ப செஞ்சாலி நின்றாடும்
எஞ்சா மறைனூல்நல் வேதியர்க்குத்  -- தஞ்சம்
திருக்கோ வலூர்ஆய மாயனை காரார் 
புறவின் கலியன்வாய்க் காண்.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

மூன்றாம் பத்து =>


இருந்தண் பழனவரைச் சாரல் மீதுலாவு
காருந்த வந்துதண் காவில் -- நீருந்து
மால்திருவை இந்தி ரபுரத்து ஈசனை
வேல்கலியன் பாடப் பயில்.


ஊன்வாட உண்ணா உயிர்க்காவல் இட்டுமேல்
வான்தேட நும்தவம் ஒன்றியற்ற -- வேண்டாவே !
தில்லை திருச்சித் திரகூடத் தான்கழல்
எல்லைப் படவாழ்வர் தாம்.


வாட மருதம் ஒசிந்தவன்! பொய்கைத்
தடம்புக்கு நாகத்து உச்சிமேல்  -- ஆடுவான்!
தேவர் வணங்கும்தண் சித்திர கூடத்தான் 
மேவலும் சாரா வினை.


ஒருகுறளாய் மூவடி மண்முறையின் வேண்டி
இருநிலம்  முன்ஒடுங்க வாங்கி -- திருவைத்தன்
மார்பில் கலந்தவன் சீராம விண்ணகர்
சேர்வான்  உலகின் தலை. 


வந்தாய்! உனைப்புந்தி யேன்மனத்தே புக்கதற்பின் 
எந்தாய்! இனிப்போகல் என்திறமோ? -- சிந்தியேற்கு
அன்பா! அணியாலி அம்மான் உமக்கிடம்
இன்பா! கலியன் ஒலி!


தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கிக் கூறிய பாசுரம் : திருவாலி - 2/3 :


தூவிரிய பூநுகரும்  தேன்வாய பொன்வண்டே!
மேவித் திரியும் சிறுகுருகே! -- ஏவரி
வெஞ்சிலை யானுக்கு என்நோய் உரைத்திடு !என்
தஞ்சம்வல் லார்க்கீ தடைவு!


கள்வன் கரியான் ஒருகாளை  என்மகளை 
உள்ளித்து தம்மூர் வயலாலி -- கொள்வர்  
கொலோ நேர்? இரும்மையல் மொய்ப்ப அயற்றும்
கொலோ?என் றாகுலமாம் தாய்!


நந்தா மறையாளர் முத்தீ முதிர்வேத
சந்தமெழு நாங்கூர் மணிமாட -- பூங்கோயில்
சென்று  வணங்கு மனத்தராய் தொண்டாள
நன்றுஉல கத்தார் விருந்து !


சலம்கொள் இரணியனைச் சாதித்து, முண்டத் 
தலையும் அரர்க்கவன் சாபம் -- தொலைத்த
பிரான்மேவும்  வைகுந்த விண்ணகரம் நெஞ்சத்து 
கூர விசும்பாளும் பேறு.


திருமடந்தை மண்மடந்தை மண்டி இருபால்
இருப்ப, அகிலமும் வானும் -- அருள்நடத்து 
நாங்கூர் அரிமேய விண்ணகரம் நன்நெஞ்சே!
ஆங்கிறைஞ்ச உத்தமர் ஆம் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நான்காம் பத்து =>


போதமர்ந்த மாது அமிழ்தின் வந்துபுணர்
மாதவனார் நின்ற விடம்நல்  -- வேதியர்கள்
நாங்கூர் திருத்தே வனார்தொகையே! கைகூம்ப
ஆங்கு இமையா திருப்பு.


கம்ப களிரட் டவன்! ஒருங்கு  மல்லரை 
வெம்மக் கஞ்சனைக்  காய்ந்தவன்!-- உம்பர்கோன்!
வண்புரு டோத்தமம் தலைசேர்ப்பத் திண்ணியதாம் 
விண்ணவ ரோடின்பக் கூட்டு.


பேரா யிரம்முடைப் புண்ணியன் எம்பிரான்
பேரரு ளாளன் பொலியும்ஊர்   -- சீராரும்
செம்பொன்செய் கோயிலதில் கார்முகிலைக் கண்டுகொண்டு
நம்பவல்லார் மாட்டே மகிழ்வு.


மாற்றரசர் தேசும் திறலும் மணிமுடியும்
நூற்றுவரும் மங்கநீள் பாரதம்கை -- ஆற்றிய 
செங்கண்மால் சேரும் திருத்தெற்றி அம்பலத்து
எங்கோமான் ஏற்றத் திகழ்ந்து.


தூம்பு பனைக்கைத் துவள துதித்துநீள் 
காம்பு மலர்க்கொண்டு வேழமெழ -- பூம்புனல்
தடத்திடை ஏகிய தேவா! திருமணிக்
கூடமிட மாகல் விளம்பு!


தாவி உலகனைத்தும்  தன்னதாக்கி மற்றாங்கு
மேவினை விண்ணவர் விண்ணப்பம் -- ஏவலாய் !
நாங்கையுள் காவளம் பாடிஎம் கோபாலர்  !
பூங்கழல் தாழல் பொலிவு!


கண்ணார் கடல்ஆடை காசினிக் குள்ளயான்
அண்ணா! உனக்கடியேன் என்வினைத்தீர் -- வண்ணம்
திருநின்ற நீயும்,அவ்  வெள்ளக் குளமும்
பொருளாக்க வல்லையோ தாம்?


கவளயானை சென்றடர்த்த காளையே என்னும்!
பவளமேனி ஒர்பார்த்தன் பள்ளித்  -- தேவதேவன்
என்னும்! எனக்குடை இன்பனென்னும்! ஏழைஎன்
பெண்ணிவள் இன்பத் துய்த்து!

நும்மைத் தொழுதோம் ! நும்பணிசெய் நும்மடியோம்!
எம்மைக் கணிசியாது இங்கயர்த்தோம்! -- எம்பெருமான்!
நாங்களினி உய்ய  நினைவராகின் இந்தளூரீர்!
தேங்காதே காட்டீர்ஆ வல்!


திருவெள்ளியங்குடி : 


ஆய்ச்சியர் வெண்ணை நனிநச்சி ஆய்க்குலத்தார் 
காய்ச்சின பால்தயி ருண்டாயால்  -- காய்சின
வேலை அரக்கர்தம் சேனை கூற்றிடைசேர் 
கோலவில்லிக் காள்இவ் வுலகு.

------------------------------------------------------------------------------------

ஐதாம்பத்து =>


அரிவ தறிவான் அடியார் வினைபாழ்
அறுக்கும் வழிதன்னால்! மேவா --  அரக்கர்
குடிபாழ்த்த  வல்வில் இராமவனூர் பூதம்
குடிவாழ்த்த  நில்லாத் துயர்.


தாம்தம் பெருமை அறியான் ! அருமறையும்
தாம்அவன் கீர்த்தி அளப்பறியான்! -- தாம்தாழ
தேவர்க் கருள்செய்  பெருமான்ஊர்க் கூடலூர்
மேவ அகம்அற்றுப் போம்!


வென்றியே வேண்டி அமரர்த் தொழுதெழ
நன்று  அமுதம் கடைந்தளிப்ப -- முன்சென்று
நின்றனை! தண்டா மரைக்கண்ண ! வெள்ளறை க்கு
நின்றாய்! இமையோர் தலை!

உந்திமேல் நான்முகனை முன்படைத்த சேயன்காண் !
அந்திபோல் ஆடை அணிமாயன்! -- எந்தைபிரான்!
சேணுயரும் செவ்வல்லித் செய்புணர்த்த தென்னரங்கம்
பேணுவார்க்கு வானவரும் ஆள் !


தாய்ப் பாசுரம் : திருவரங்கம் 2/5 :


வெருவாதான் என்றன்றே வாய்வெருவும் எம்சேய் 
திருவாளன் செய்தனகள் நோயே -- நிறைவழிப்ப
தான்மதியாள் தாய்ச்சொல் மருந்தாக நங்கைமீர் !
பான்மதியாள் என்மகள் தான் !

கைம்மா மழகளிறு  காக்கக் கலுழன்மேல்
மொய்ம்மா மனத்தனனாய் முந்துற -- எய்திட்டு
செய்தவத்த தாம்பயன் ஆளன் அரங்கன்பால் 
உய்தவர்க்கு சாரா வினை.

பண்டே பெருக்கிய நீரொடு நித்திலமும்
அண்டமும் யாவும் வயிற்றிடை -- மண்ட,தன்
வாயுள்ளே  பெய்த அரட்டன் அரங்கனுக்
காயுள்ளார் பற்று அறும்.

ஏழையேன் ஏதிலேன் எம்மா ! எனதாவி
கூழைநாய் அற்றேநின் பால்குழையும் -- மோழை
எடுத்து முகில்மழை காத்தாய் அரங்கா!
தடுத்தாள் எமைப்பைய வே!


கையிலங்கு ஆழி மிளிர்சங்கம்!  நீள்வரைபோல்
மெய்யிலங்கு மேகலையும் பூவினாள்  -- வைகும்
மருவிருந்த மார்பன் அணிதிருப்பேர் அப்பன் 
கருத்திருந்தார் கூடும் விசும்பு.

தீதுற நின்ற வசுரர் பொருசமர்காம்
போது அவர்க்கு இறையவரும் -- மீதுற
முந்த, நெறுநெறு என்றழல் செய் நாதனவன்
நந்திபுர விண்ண கரே !


ஆழ்வாருக்கு அபிநந்தனம் :

கல்லார் திரள்தோள் மங்கைமன் வாட்கலியன்!
வெல்போர் களியானை வல்லான்! -- தொல்சீர்
வயல்மங்கை ஆலி அருள்மாரி! ஒன்னலர்
சீயம்! குமுதத்தாள் துணை!

-----------------------------------------------------------------------Cont...d/Next Blog















Thursday, July 16, 2015

நிருஸிம்ம ஸ்தோத்ரம் .

Photos Courtesy : Kesavabhasyam Vn.
 
நச்சு நாரணனை அச்சுதனை!
இச்சகத்து இணைஇலானை !
மெச்ச மகிழ்வானை என் மாலவனை !
எச்சில்வாய்க்  கொண்டு ஏத்தினேனே!.  -1

கற்ற கல்வி இற்றெனப் பற்றி
உற்ற போது உரப்ப உணர்த்தலும்
நிற்ற தூண் பிளந்த இரணியன்
முற்றும் வகைச் செற்ற வென்னப்பனே!   -2
https://scontent.fphx1-1.fna.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/11665571_1045548605457107_6777329204581848014_n.jpg?oh=4639e5b5161a3ac50f1a05bf4502882a&oe=564D83D0
நாழிகை இதுவது என்றிலாது
வாழும் வகை வரம் வேண்டி
ஆழியானைப் பழிகொள விழைவானை
போழ்த்தானை பொழுதும் புலற்றுவனே.  -3.

நாராயணா ! என்ற நின்நாமம் ஓத
யாரானும் தடிந்து தண்டிப்பரோ ? அஃதால்
நேராதன செய்தான் என்மகன்  எனவே 
ஓராதவனை ஓய்த்தானை நாளும் ஒழுகு.  -4.




கல்லெனச் சமைந்தானைக்  காணல் திறமோ ?
சொல்லில் சுருதியுள் சொல்லப் படுமவனை 
இல்லை எனஇயற்றுவார் இருளடங்க முன்பு நீ
கல்லினில் தோற்றவும் ஆற்றுமோ பிணக்கினி ?  -5

கானிடைக் கல்லதன் எறிந்தும், கைமா
ஆனுடைக் காலதால் இடர்ந்தும், ஆய்ந்த
கனலிடைக் காய்ப்பவும்,நாளும்  நாமம்
 நினதுடைப் பிள்ளையை பிள்ளை எனலாமே?   -6

கள்ள உள்ளத்து இரணியனைக் காய
வெள்ள வெள்ளத்து அரிதுயில் அகன்றனை!
எள்ளித் தள்ள  வந்தானை தம்பத்தும்
துள்ளி அள்ளம் செய்து அட்டனை அரியே!.  -7




நின்ற நெடுந்தூண் நில்லா துதிர
மன்றில் மார்தட்டித்  தூண் தொட்ட
ஞான்று, இரணியன் உளம் தொட்டுக்
கன்றிய கைக்கபயம் அவன்கால் பணிவார்க்கே!.  -8

பிள்ளைவாய்  அமுதத்தேறல் நின்நாமம் விடமென்றான  
உள்ளம்தொட்டு இரணியன் உயிரை உண்டாய் !
கள்ளமுன் செய்கை! காயுமுன்நாமம் நோயதாமோ?
தெள்ளியசிங்கா ! தெளிகிற்கேன் தண்டனையும் அருளதாலோ?   -9


அல்லில்கேணிக் கண்ணனை !  ஆழி கொண்டு 
துல்லியம் போதில் துரகம் துளைத்தானை!
வில்லின் வலவன் ராமனை! நாகசயனைச்
சொல்லும் போதும் நரசிங்கா! என்பேனே.  -10


-- தாசரதி தாஸன்,
கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன்.








Wednesday, July 15, 2015

சூர்யாஷ்டகம் .

ஆதி தேவ நம்ஸ்துப்யம் பிரஸீத மம பாஸ்கரா  |
திவாகர நமஸ்துப்யம் பிரபாகர நமோஸ்துதே ||

Adhi deva Namasthubhyam,
Praseeda mama Bhaskara,
Divakara namasthubhyam,
Prabha kara Namosthu they. 1
ஸப்த அஸ்வ ராதா ரூடம் பிரசண்டம் காஸ்யபாத்மஜம் |
ஸ்வேத பத்ம தரம் தேவம் தம் ஸூர்யம் பிரணமாம்யஹம் ||

Saptha aswa radha roodam,
Prachandam, Kasypathmajam,
Swetha padma dharma devam,
Tham suryam pranamamyaham 2

லோஹிதம் ரத மாரூடம் ஸர்வ லோக பிதாமகம் |
மஹா  பாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் பிரணமாம்யஹம் ||

Lohitham Radha maroodam,
Sarva loka pithamaham,
Maha papa haram devam,
Tham suryam pranamamyaham 3
த்ரைகுண்யம் ச மகா ஸூரம் பிரம்ம இந்திர மகேஸ்வரம் |
மஹா  பாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் பிரணமாம்யஹம் ||

Trigunyam cha maha sooram,
Brahma Vishnu maheswaram,
Maha papaharam devam,
Tham suryam pranamamyaham 4
பிரம்ஹிதம் தேஜ புஞ்ஜம் வாயுமாகாஸ  ச |
பிரபுஸ்துவம் ஸர்வ லோகாநாம் தம் ஸூர்யம் பிரணமாம்யஹம் ||

Bramhitham teja punjam cha,
Vayu makasa meva cha,
Prubhustwam sarva lokaanam,
Tham suryam pranamamyaham 5
பந்தூக புஷ்பா ஸங்காஸம் ஹார குண்டல பூஷிதம் |
ஏக சக்ர தரம் தேவம் தம் ஸூர்யம் பிரணமாம்யஹம் ||

Bandhooka pushpa sankaasam,
Hara kundala bhooshitham,
Eka chakra dharma devam,
Tham suryam pranamamyaham 6
விஸ்வேஸம் விஸ்வ கர்த்தாரம் மஹா தேஜ ப்ரதீபனம் |
மஹா பாபா ஹரம் தேவம் தம் ஸூர்யம் பிரணமாம்யஹம் ||

Viswesam Viswa karthaaram,
Maha Theja pradheepanam,
Maha papa haram devam,
Tham suryam pranamamyaham 7
ஸ்ரீ விஷ்ணும் ஜகதாம் நாதம் ஞான விக்ஞான மோக்ஷதம் |
மஹா பாபா ஹரம் தேவம் தம் ஸூர்யம் பிரணமாம்யஹம் ||

Sri Vishnum jagathaam nadam,
Jnana Vijnana mokshadham,
Maha papa haram devam,
Tham suryam pranamamyaham 8


ஸூர்யாஷ்டகமிதம் நித்யம் கிருக பீட பிரணாசனம் |
அபுத்ரோ லபதே புத்ரம் தாரித்ரோ தனவான் பவேத் ||

Suryashtakam idham nithyam,
Gruha peeda pranasanam,
Aputhro labhathe puthram,
Daridhro dhanavan Bhaveth.
ஸ்தப்த ஜன்ம பவேத் ரோஹி ஜன்ம ஜன்மான் பிரமுச்சயதே : |
ந வியாதி ஸோக தாரித்ரயம் ஸூர்ய லோகம் ஸ கச்சதி ||
Saptha janma bhaved rogi,
Janma janman piramuchyathe .
Na vyadhi soka dharidhryam,
Surya lokam sa gachathi.

--Compilation from India Divine Magazine.
By K S Srinivasan.

Tuesday, July 14, 2015

'' தவம் மே - ஹம் மே குதஸ்தே '' ?



Photo Courtesy : Kesavabhasyam Vn.

''எனக்கு நீ தொல்லடிமை'' என்றலுமே அன்று
''எனக்குயான்'' என்பேன் ! உளவோ -- எனக்குபோல்
சாட்சியம் மற்று உனக்கு? பழுதேயோ
ஆட்சியி லாம்தொடர்சிக் காய்
செய்தபல சாத்திர நூலும்? அவதாரம்
பொய்த்தவோ? பொய்யாப் புலவர் நல் -- வாய்மொழியும்
கைம்மையோ? நீராட நின்றஇக் கோலம்தான்
எம்மோய் நீ! காட்டும் திகைப்பு.

These two Tamil verses are an attempt to translate the Sankrit sloka ''Thuvam Mey - Hum Mein'' by Sri Parasara Bhatta, the Blessed son of Sri Koorathalvan.
The story goes like this. :
Bhattar once went to partake in the ''bathing'' ritual ( நீராட்ட உற்சவம்) of Sri NamPerumaL of Sri Rangam. The Lord standing in His wet attire quipped Bhattar ''what he feels'' heart to heart at that particular moment. Bhattar immediately composed a Sloka which runs as a question and answer session between them two.
Lord Ranganatha said - You are Mine - implying thereby that all Souls are His Subjects (பரதந்த்ரன்) and Bhattar especially is His prized possession (சேஷபூதன்).
Bhattar replied - No. I am my own Master . (ஸ்வதந்ரன்) .
The Lord - How that be ? (குதஸ்தே?)
Bhattar - The onus to prove that I belong to you, is on You, and not on Me, as You are the Claimant.
The Lord - The Scriptures have declared so. I have at the time of visits to this place (அவதாரங்களில்) by My - Life and Teachings - added credence to Scriptures. The Alwars and Acharyas who were sent by Me have also reiterated my Sayings in their Sacred volumes of Divya Prabandams and Stotra Malas. What more proof or evidence do you require ?
Bhattar - All those evidences are biased, as they are created and professed by you and your own people, who have mimicked under your influence and not out of Their Free Will. Therefore, all that You claim do not stand testimony to what You say.
The Lord - Posed bewildered, as though He is left with no other option except to Swear standing on His Wet cloth - which is considered a Promise without a rider to dispute.
Bhattar - Acknowledging His Grace conceded His surrender.

Now the Tamil version will make sense to every one I believe, including the Lord of ThiruvallikENi , to Whom the same are dedicated and will forgive the non-sense uttered of Me therein.

-- தாஸன். 
(கி.ஸ்ரீ. ஸ்ரீ.)
K S Srinivasan

Thursday, July 9, 2015

சூதும் சொக்கட்டமும் - கண்ணனை அழைக்காத போது ?

 

வேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா?
கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்!
வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா?
ஏன் அப்படிச்செய்யவில்லை பகவானே? என்று கேட்கப்பெற்ற
போது கிடைத்த பதில் -. அதிரவைக்கும் பதில்
---------------------------------------------
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர்
உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ
வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர்
என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.
ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள்,
தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,
எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார்.
தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,சிறு வயது முதலே கண்ணனின்செயல்களைக்கவனித்து வந்த உத்தவருக்கு,
சொல் ஒன்றும்,செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின்லீலைகள்,
புரியாத புதிராக இ ருந்தன.அவற்றுக்கானகாரண, காரியங்களைத்
தெரிந்து கொள்ள விரும்பினார்.
"பெருமானே! நீ வாழச் சொன்னவழி வேறு; நீ வாழ்ந்து காட்டியவழி
வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்றபாத்திரத்தில்,
நீ புரிந்த செயல்களில்,எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு.அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக
இருக்கிறேன்.நிறைவேற்றுவாயா?"என்றார் உத்தவர்.
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில் எனக்கு ஒரு
விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன்.
உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.
நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த
ஞானியான நீ, 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த
விளக்கத்தின் படி, முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம்
இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்
அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும்,
தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,வஞ்சகர்களுக்கு
நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன்
செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள்
நுழைந்து தடுத்திருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.'
திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்வைத்து ஆடு.
இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால்
விட்டான் - துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால்,
அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக
விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை
ஏற்பட்ட போதுதான் சென்று, ';துகில்தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன்,
குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர்சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய
மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்
படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்?
இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'
என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்து
விட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை.நமக்காக
இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.
பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க
வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த
விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்"
என்றான் கண்ணன்.
உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்.
"துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது.ஆனால், பணயம் வைக்க
அவனிடம் பணமும்,ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம்
நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச்
சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும்
அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,' நானும் பணயம்
வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்
பகடைக்காயை உருட்டுவான்' என்று சொல்லியிருக்கலாமே?
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்?
நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது,அவன் கேட்கும் எண்ணிக்கைளை
என்னால்தான் போடமுடியாதா? போகட்டும். தருமன் என்னை
ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது
மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். 'ஐயோ! விதி வசத்தால் சூதாட
ஒப்புக் கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்னுக்கு
மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன்மட்டும் சூதாட்ட
மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக்
கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு
அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக் கூடாதென
என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது
பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று
மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு நின்றேன்.
பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும்,
தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர,
என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே! அண்ணன் ஆணையை
நிறைவேற்ற துச்சாதனன்சென்று, திரௌபதியின் சிகையைப்
பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.
அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து வாதங்கள்
செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை!
நல்லவேளை..துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி...ஹரி...அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள். பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற
அப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும்
சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச்
சம்பவத்தில் என் மீது என்ன தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.
"அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால்,
ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?"
என்றார் உத்தவர்.
"கேள்" என்றான் கண்ணன்.
"அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை
நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ
வரமாட்டாயா?"
புன்னகைத்தான் கண்ணன். "உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;
அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே!
அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.
"நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று,
நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய்.
நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து
பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும். அப்படித்தானே?" என்றார் உத்தவர்.
"உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக
உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை
நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை
களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து
விடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்து
விடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும்
சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல்
சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது
அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும்
இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட
நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?" என்றான்
ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா!
எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!
பகவானைப் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும், அவனை
உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! "அவனின்றி ஓர்
அணுவும் அசையாது" என்ற நம்பிக்கை வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க
முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?
இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழி நடத்தினானே தவிர,
அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை
அதுதான் பகவானின் மேன்மை!
---------------------------------------------
இணையத்தில் படித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்,
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------

அன்புடன் வாத்தியார் அவர்கள் தந்துள்ள விளக்கம் அழகானதே. என்றாலும் சம்பிரதாய பத்தமான நோக்கு பின்வருமாறு :


பகவான் மனுஷயனாக அவதரிக்கும் போது, அவதாரத்தில் மெய்ப்பாடு காரணமாக, தன்மனுஷ்ய பாவனைக்குச் சேர சில குறைகளை தம்மிடத்திலே ஏறிட்டுக் கொள்கிறான்.


ராமாவதரத்தில் சுத்த வீரனான ராமன் கரதூஷண யுத்தத்தில் ஓர் அடி பின் வாங்கினான் என்பதும், வாலியை மரத்தின் பின் நின்று அம்பெய்திக் கொன்றான் என்பதும், பரபுருஷன் கிருகத்தில் சிறை இருந்த காரணத்துக்காக சீதா பிராட்டியை அவள் பதிவ்ருதை என்று தெரிந்தும் தீக்குளிக்கச் செய்தது இத்யாதி தான் மனுஷ்யன் என்பதை பிரம்மாவின் வரத்துகுச் சேர நிரூபிக்கப் பிரயாசைப் பட்டு என்றே சொல்லலாம். அவன் குட்டு வெளிப் பட்ட இடங்களும் பல உண்டு.


அதேபோல் கிருஷ்ணவதாரத்திலும் தன்னை அசக்தன் போலே காட்டிக் கொள்ளவே ஜராசந்தன்-காலயவனன் இவர்கள் போரில் துரத்திய போது புறமுதிகிட்டு ஓடி, பின் துவாரகைக்குக் குடி புகுந்தான். தனக்குப் பிள்ளைப் பேறு இல்லை என்று சிவபெருமானிடத்தில் சென்று யாசித்து வரம் பெற்றதாக பாரத்தத்தில் ஒரு கதையும் உண்டு. மாறாக, அவனுடைய பால சேஷ்டிதங்களைப பார்க்கும் போது அவனுடைய பரத்வத்துக்கு ஒன்றும் குறையில்லை.


கௌரவர்களைப் போலே பாண்டவர்களும் தண்டனைக் குரியவர்களே. அவர்களைக் கொல்லாமல் விட்டது, திரௌபதியின் மங்கள சூத்ரத்துக்கு பங்கம் வரக் கூடாதாகையாலே.இது கண்ணன் நினைவு. குரு-அரசவையில் அவள் பரிபவம் கண்டு ரக்ஷிக்காமல் வாளா இருந்தவர்கள் பாண்டவர்கள். என்றாலும் பரம பாகவதையான திரௌபதியின் மங்கள சூத்ரம் காரணமாக அவர்களையும் கொல்லாமல் அவர்களுக்குத் துணை போனான் கண்ண நெம்பெருமான் என்பதே உண்மை.


சிசுபால-தந்தவக்ரர்களை கண்ண பிரான் தன் கையால் கொன்று அவர்களுக்கு மோக்ஷமளித்தான். கௌரவர்கள் அதற்கும் லாயக் அற்றவர்களாய் அருச்சுனனைக் கருவியாக்கி கொல்வித்தான். அதுவும் அவன் லீலையே ஆகும்.


பரசுராம,பல ராமாவதாரங்களோ வென்னில் அவர்கள் பூர்ணாவதாரங்கள் போலன்றிக்கே அவேசாவதாரம்- அம்சாவதாரங்கள் ஆகையாலே தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்றாலும், அவர்கள் விஷயத்தில் நிறையைவிட குறைகளே மிக்கு.


ஆன போதிலும் பகவானுடைய அவதார ரஹஸ்யமறிந்தவர்கள் அவனுடைய செயல்களுக்கு விடைகாண முயல மாட்டார்கள். அது பகவதபசாரத்திலே போய் முடியும் என்று கொண்டு இப்படிப்பட்ட அராய்சியில் துணைபோகமாட்டார்கள். ஹேயகுண பிரதிபடனான பகவானிடத்தில் எந்த குற்றப் பார்வையும் அதனால் ஒவ்வாது.


உத்தவ கீதை நமக்குப் பாடமேயன்றி அவருக்குத் உண்மையில் ஒரு தேடல் இல்லை. மேலும் நிரங்குச ஸ்வதன்ரனான பகவான் ஒரு புன்சரிப்பிலே தன் பதிலை உத்தவருக்குக் காட்டி அவர் வாயை அடைத்தான் என்பது பிரசித்தம்.
'இருகையும் விட்டேனோ திரௌபதியைப் போலே ?'' என்பது திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தை. ''ரிணம் பிருவர்த்த மிவ ....'' என்பது ஸ்ரீ கிருஷ்ண
உபோத்காதம். அப்படிப்பட்ட திரௌபதி விஷயத்தில்


ஆபத்திலே புடவை சுரந்தும்,
சிறு கீரை பிரசாதத்தை உண்டு துர்வாசரை தூர ஓட்டியதும்,
அன்னூற்றுவர் மங்க பார்த்தந்தன் தேர்முன் நின்று பாரதம் கை செய்தது


முதலான இத்தனையும் செய்து அபலையான திரௌபதி அழைத்த போது தூரவாசியாக ஆனேனே எனத் தன்னை குறையாளனாக, கடனைத் தீர்க்காத கடனாளியாக, ''ரிணம் பிருவர்த்த மிவ '' என்றே சொல்லிக்கொண்டு தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளினான் வாசுதேவனான கண்ணன் (கண் = ரக்ஷணம். தன்தொழிலை பூர்ணமாமாக செய்பவனே கண்ணன் என்ற பொருளில் ).


சிறை இருந்தவள் ஏற்றம் சொல்ல வந்தது இராமாயணம். அதேபோல தூது போனவன் ஏற்றம் சொல்ல வந்தது மகாபாரதம். இராமாயணத்தில் எப்படி ஹனுமானோ அதேபோல பாரதத்தில் திரௌபதியும் பரம பாகவதை. ஹனூமானுக்கு பல இடங்களில் தனிக் கோயில் இருப்பது போல இவளுக்கும் ''திரௌபதி அம்மன்'' என்ற பெயரில் ஆங்காங்கு கோயில்களைப் பார்க்கலாம். சப்த்த பதிவ்ரதா சிகாமணிகளில் இவளும் ஒருத்தி. பூ மிதித்தல், கரகம் எடுத்தல் போன்ற பிரார்த்தனை தெய்வம் அவள். பெங்களூரில் காடன் பேட்டை திரௌபதி அம்மன் கோயில் கரகம் உலக பிரசித்தி பெற்றதாகும்.


கஜேந்திரன் கூப்பிட்ட குரலுக்குச் சென்று உதவினாப் போலே, தான் அவள் இருக்கும் இடத்துக்குச் சென்று ரக்ஷிக்கவில்லையே என்பது கண்ணனின் வருத்தம். அவன் அப்படி செய்யாததற்கு காரணம் உண்டு என்பர்.


அதாவது, அவன் நேரே சென்றிருந்தால், முதலையைக் கொன்றது போலே துச்சாசனனை கொல்வதோடு முடிந்திருக்காது. துரியோதனன், துணைபோன கர்ணன், அநீதியின் பக்கம் நின்ற பீஷ்ம, துரோணாதிகள் அனைவரும் கொல்லப்பட வேண்டும். அதற்கு துரியோதனனின் பாபங்களின் முதிர்வுக் காலம் வரை பொறுத்திருக்க வேண்டும் என நினைத்தான் போலும்.


திரௌபதிக்கு அப்படி என்ன பெருமை என்றால் அவள் பிறப்பும், நடத்தையும் காரணமல்ல. மற்று அவள் சரணாகதியின் மஹத்வம் அறிந்தவள். கிருஷ்ணனையே எல்லாமாக விஸ்வசித்தவள். ஆபத்திலே தன்னுடைய மர்ம ஸ்தானங்களை மறைத்துக் கொள்வதை விடுத்து இருகையையும் உயர்த்தி, ''த்வாரகா நிலைய அச்சுத, கோவிந்த, புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதாம் '' என்று முறையிட்டாள்.


கஜேந்திரனும் '' அகில காரண, அற்புத காரண, நிஷ்காரணாய'' என்று 3 படிகளாலே பகவானுடைய பரதவ பராகாஷ்டமான உபாதான காரணம், சககாரி காரணம், நிமித்த காரணம்  என்றிருக்கிற திரிவித்த காரண பூதன் ஈஸ்வரன் என ஓலமிட்டு அழைத்தான்.


அவனைப் போலவே திரௌபதியும் ''அச்சுத [ ஆஸ்ருதர்களை கைநழுவ விடாதவன்], கோவிந்த [ கோ=ஸ்ரீ சூக்திகள். விந்ததி=பேசப்படுதல். ஆரிய-திராவிட வேதங்களிலே நன்கு உத்கோஷிக்கப் பட்டவன்], புண்டரீகாக்ஷ [தாமரைக் கண்ணன்] ஆகிற பரதவ சூசக சப்தங்களையே இட்டு கிருஷ்ணனை அழைத்து தன்னை சமர்ப்பித்தாள்.


அப்படிப்பட்ட திரௌபதி விஷயத்தில் கண்ணன் ''ரிணம் பிருவர்த்தம் இவ'' என்று பேசி தன்னை குறையாளனாக நினைப்பதில் ஆச்சர்யம் உண்டோ ?


இச்சையே அதிகாரம். இரக்கமே உபாயம். இனிமையே உபேயம். (திவ்ய தம்பதிகள்) இருவரின் ஆனந்தமே பல வியாப்த்தி பிரயோஜனம் என்பற்குச் சேர, உய்ய ஒரே வழி அவன் நினைவு. திரௌபதி பக்கல் அவன் நினவு உண்டாகையாலே அவள் உஜ்ஜீவனம் அடைந்தாள். அவள் மங்கள சூத்திரம் காரணமாக பாண்டவர்கள் ஐவரும் நரகாவகர்கள் ஆகாமல், ஸ்வர்கஸ்தர் ஆனார்கள்.


கரும பலம் அனுபவித்தே அற வேண்டும் என்பதாலே , பாண்டவர்கள் அல்லல் பட்டு பின்பு அருளுக்கு இலக்கானார்கள் என்பதும் நியாமான கடவுளின் தீர்ப்பேயாகும்.

கி. ஸ்ரீ. ஸ்ரீ .

Sunday, July 5, 2015

ஸ்ரீ வரவரமுனி பதாம்புஜ பிருங்கம் -- Sri VaraVara Muni PadAmbuja bRungam.

ஸ்ரீ :

ஸ்ரீ மதே ராமானுஜாய நம :



பிரணமாம் யஹம் முநி புங்கவம் !
                      எதிவர புனரவதாரவரம் -- மாமுநிம் !
வாரணமஷ்டதிக் பதம் கமலாநாத
                      காமிதகுரும்! வந்தே -- வரவரமுநிம் !
நாராயணபர சடரிபு வாக் விஷாரம் !
                      நிருபமோ பேத -- ஸேஷபீடாஸிநம் !
திரிதண்ட மண்டித கரம் ! சௌம்யதாயக
                       த்வாதஸ புண்ட்ரதரம்! ஸுகுணோபேதம் !
பூரிதகருணா விலஸத் கசிதம்
                       கிருபாமாத்ரப் பிரஸந்ன வரப்பிரதம் !
சரணம் தவபாதம்  நிரைதுஹீர் உபாயான்தும்  ! 
                      ஸுலப ஸ்ரீதர: கலயாமஹ: !
--தாசரதி தாஸன்,


ஸ்வாபதேசம்:

பிரணமாம் யஹம் =  வணங்குகிறேன் . சேவையா - பூஜார்த்தம் சேவிக்கிறேன்
முநி புங்கவம் ! = முநி ஸ்ரேஷ்டம் .
எதிவர புனரவதாரவரம் மாமுநிம் =  எதிராசரான எம்பெருமானாரே மாமுநிகளாக அவதரித்தார் என்கிற ஐதிஹ்யத்தின்படி - முனிவர்யர்களில் தலைவரான ஸ்வாமி மணவாள மாமுனிகளை  வணங்குகிறேன்.    
                                                            
வாரணமஷ்டதிக் பதம் =  அஷ்டதிக் பதாஸ்ரயர் என்கிற விருதுடையவரும், 
          
கமலாநாத = ஸ்ரீ:பதியான ஸ்ரீமந் நாரயணன் 
                                                             
காமிதகுரும் = ஆசையோடே ஸ்வீகரித்த .
வந்தே வரவரமுநிம் =  அழகிய மணவாள மாமுனிகளை வந்தனை செய்கிறேன்.
நாராயணபர சடரிபு வாக் விஷாரம்=  ''மந்மநா : மத்பக்தா :மத்யாஜீ '' என்று வாசுதேவ ஸர்வம் என கண்ணனெம்பெருமான் கீதையில் கூறியபடிக்கு இருக்குமவர்கள் யாரோ அவர்களே நாராயண   பரர்கள். அதன்படி இருந்து பேசிய ''சடரிபு'' வான (சடம்=சம்ஸாரமாகிற விஷ வாயு, ரிபு : = விரோதி. அத்தை ஹும்கரித்து தூர ஓட்டியவர்)  நம்மாழ்வார்.
                                                            
''உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்'' என்றிருந்த நாராயண பராயாணரான ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளே தாரக, போஷாக,   போக்யமக்கக் கொண்ட நம் மாமுனிகள் அதிலே ப்ரவண்ராய்                                             
நிருபமோ பேத ஸேஷபீடாஸிநம் =  அரங்கன் தன்னுடைய ஆசார்ய பிரதி பக்தியைக் காட்டுவதற்காக ''ஸ்ரீ சைலேச'' தனியனை அனுகிரகித்ததோடு மட்டுமலாமல் தன்னுடைய சேஷ பீடத்தையும்  அவருக்குத் தந்து உபகரித்தான். இந்த பரிசு எந்த ஆழ்வார், ஆசாரியர்களுக்கும் கிட்டாத பகுமானமாகையாலே நிருபமோ  பேதம். இணையில்லா சன்மானம். அதனாலேயே மாமுனிகள் ஸர்வதா சேஷபீடத்தில் திருக் காட்சி தந்தருளுகிறார் அனைத்து திவ்யதேசங்களிலும்.                                                       
                                                            
திரிதண்ட மண்டித கரம் = துரீய ஆஸ்ரமாதிகாரி ஆகையாலே த்ரிதண்டத்தை தரித்தவராய்,
                                                             
சௌம்யதாயக = சம-தமாதி குணங்கள் வடிவிலே தொடை கொள்ளலாம் படியான பிரசாந்த ஸ்வாபாவராய்
                                                            
த்வாதஸ புண்ட்ரதரம் = ஸ்ரீ வைஷ்ணவ சின்னங்களான ''கேசவாதி'' பன்னிரண்டு திருமண்கப்புகளை தரித்தவராய்
                                                             
ஸுகுணோபேதம் = சர்வ மங்கள குணங்களுக்கும் இருப்பிடமாய் திகழ்வரும் அத்தாலே அநிதர சாமான்யராய் விளங்கும் மாமுனிகள்
                                                            
பூரிதகருணா விலஸத் கசிதம் = முலைக் கடுப்பாலே பால் சுரக்கும் தேனுவைப் போலே, தன கருணை ஒன்றையே அவலம்பித்து
                                                             
கிருபாமாத்ரப் பிரஸந்ன வரப்பிரதம் =  அனுவர்த்திப் ப்ரஸன்னாசாரியர்கள் போலே அதிகாரத்தைப் பாராமல், நெஞ்சில் ஈரத்தோடே கடக்ஷித் தருளும் 
                                                             
சரணம் தவபாதம்  =  தேவரீரை உபகாரக ஆச்சர்யராய்க்  கொண்டு ஆஸ்ரயிக்கிறேன். (பரம சேதனனுக்கு சேஷனையும், சேஷிக்கு சேதனனையும் உபகரிப்பவரே ஆசாரியன்).                         
                               
நிரைதுஹீர் உபாயான்தும்  = கைமுதலில்லா  அடியேனை தேவரீர் இடத்தில் ஸமர்ப்பித்த படியாலே  உம்முடைய கிருபைதன்னையே
                                                                                        
ஸுலப ஸ்ரீதர: கலயாமஹ: = ஸுகர உபாயமாக்கி  ஸ்ரீ : பதியான வகுத்த சேஷி பக்கல் எம்மை உய்த்திடுமின். இதுவே அடியேன் செய்யும் விண்ணப்பம்.
                                                
 In English :

பிரணமாம் யஹம் =  I prostrate at The lotus Feet , devoid of Ego and in humble submission of Self to the Greatness and Nobility of

முநி புங்கவம் ! = (MaNavaaLa) Maa Muni -a Bull like a person among the Ascetics. [Muni : manana seelaha Munihi. He who is in constant meditation of the Lord & His glories or of the welfare and up-liftment of his Disciples . pungavO means ...a Bull, a Hero, an eminent person ].
எதிவர புனரவதாரவரம் மாமுநிம் = I salute Sri MaNavaaLa MaamunigaL, who is considered the re-incarnate of Swami Ramanuja Himself.
வாரணமஷ்டதிக் பதம் = Swami MaNavaaLa MaamunigaL had Eight Disciples, like a Fortress guarded by elephants on all the eight sides . They were 1. VanavAmalai Jeeyar. 2. Pattar PirAn Jeeyar. 3. Kandadai Annan. 4. Thirumalai Anna. 5. Erumbiyappa. 6. ThiruvEnkata Jeeyar. 7. ApiLLai. 8. AppuLLar.    
     
கமலாநாத = It is believed that Lord Ranganatha, at the culmination of the ''Yeedu''  KalakEshbam, an erudite composition of NambiLLai's commentary on Swami Namalwar Thiruvoimozhi, at His precincts, appeared in the guise of a child of the Sannidhi Bhattar and submitted ''SrisailEsa'' sloka and disappeared.
காமிதகுரும் =  He thereby acknowledged Swami ManavaLa MaamunigaL as His preceptor for having elaborated the ''Dwayaratha'' meaning of Thiruvoimozhi to Him. Such is the greatness of Swami ManavaaLa MaamunigaL.

வந்தே வரவரமுநிம் =  I bow before this ( vara means MaNavaaLan (Bride-groom) vara vara means the handsome Bridegroom) Azhagiya MaNavaaLan. The Lord, Sri Ranga is often called Azhgiya maNavaaLan. The sanskrit transliteration of the same is VaraVaram. The same name was given to MaamunigaL originally by His parents.  And after becoming a Sanyasi, He came to be called MaNavaaLa MaamunigaL.
நாராயணபர சடரிபு வாக் விஷாரம்=  MaamunigaL is the compendium of Swami Namalwar Thiruvoimozhi and its ''Yeedu'' commentary in its full and original form and He is the one who made it known to the world by discoursing on it several times during His life time.

நிருபமோ பேத ஸேஷபீடாஸிநம் = Swami adores the ''Sesha peeTam'' given in reverence by Lord Sri Ranganatha at all places at all times, which speak volumes about the glory and emulation by the Lord of Sri Rangam.
திரிதண்ட மண்டித கரம் = He holds in His hands, the Mast that which represent His Renounced walk of Life,
சௌம்யதாயக = Embracing tranquility and compassion in His eyes and appearance
த்வாதஸ புண்ட்ரதரம் = With tattooing marks of twelve ''NamAs'' holified by the 12 Names of the Lord. ''Pundram'' is one of the 5 ''samskarAs'' a ''Sri VaishNava'' should display in action and deeds. They are : ThApa : Pundra, nAmam, Mantram tata yagnam.
ஸுகுணோபேதம் = The beholder of all Virtues and Attributes of a Sri VaishNava , distinctly differentiate Him from the rest
பூரிதகருணா விலஸத் கசிதம் = His compassion knows no bounds or reason.
கிருபாமாத்ரப் பிரஸந்ன வரப்பிரதம் = His Graceful acceptance is involuntary and needs no catalytic deeds by the benefactor.
சரணம் தவபாதம்  =    I surrender unto Thee, My Swami and Thou be my Purushakara : Purum sanOti yiti Purushakara :

நிரைதுஹீர் உபாயான்தும்   = I have nothing in return. But that don't matter for you. I pray Thou shall bring    
                                                       
ஸுலப ஸ்ரீதர: கலயாமஹ: = The Lord much easier and swifter than I beg of You in total Devotion and Gratitude.
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆசாரியன் திருவடிகளே சரணம்.
 ((கிடாம்பி ஸ்ரீநிவாச ரங்கன் ஸ்ரீநிவாச தாஸன்.))