Thursday, February 25, 2016

Sesha Vahanam - Masi Maham - Sri Parthasarathy Perumal purappadu.



Photo courtesy - Kanakaraj Kumar.

பரம்பரன்! பார்த்தன் பராத்பரன்! சேஷன்
புரத்த பரமபத நாதன்! -- சிறந்தநல்
தேவிமார் சேர்ந்திருபால் மேவி அருள்மாலை
நாவில் இறையேனும் கூவு!

K S Srinivasan.

Wednesday, February 24, 2016

ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் சமுத்திரத்தில் தீர்த்தம் சாதிக்கும் அற்புதமான காட்சி!!!


Photo courtesy: Kavalkezhani vinjimoor Srinivasan swamy

வங்கமா தண்புனல் வாருணி தாள்வருட
அங்கை சிறகாள் பறவைதான் -- தாங்கி
வருவான் ஒருவல்லித் தாமரை யாள்சேர்
திருமார்வன் மாசிமகத் தன்று!

K S Srinivasan.

சவரி ராஜன்

Inline images 1


தருகை நீண்ட தயரதன் மகன்தான் இவனோ?
வருபுனல் மேகம் எனகூந்தல்  முடியானோ?
திருந்தச் சமைத்த அணிமணி ஆடை அழகனார் 
திருக்கண்ணபுரத்  தம்மான் இவர்க்கெதிர் மற்றெவர்?

K S Srinivasan

திருக்குடந்தை ஸ்ரீ ஆதி வராஹர் சேஷ வாஹனம்

Inline images 1

Photo courtesy : Kesavabashyam Vn

தரணியாம் மங்கை தன்தொடைமேல் தாங்கி  
அரவணைப்  பாம்பு அவரிருவர் -- சேர 
மடிமேல் அணைய அடியான் எமக்காய் 
தேடுமால் வீதிவாய் நின்று.


K S Srinivasan

ஸ்ரீ பெரருளாளனுடன் ஸ்ரீ திருக்கச்சிநம்பிகள்.

Inline images 1

Photo courtesy : Kesavabashyam Vn

வாஞ்சை யுடனேநம்   கச்சிக்கு வாய்த்தானும் 
தீஞ்சொல்  நாலிரண்டு பேசுமொழி -- விஞ்ச 
உரைத்தவர் வாய்இளையாழ் வார்குறை தீர்த்தான் 
நிறைஞான  தேவகுரு வாழ்த்து!


K S Srinivasan

பிரணவத்தின் வெளிப்பாடு. அகாரம் - தியாகேசன். உகாரம் - அந்தரங்கர். மகாரம் -வைதிகோத்தமர்



Photo courtesy : Ananthanpillai Kunnavakkam Varadharajan

ஆதியில் ஆங்கவரை அடவியுள் காத்தான்!
பாதியில் ஆறு வார்த்தை இவரால் மொழிந்தான்!
மீதியைத் தானே உரைப்ப லோககுருவாய்ப் போந்தான்!
வேதத்தின் உச்சியான் தேவாதி தேவன் இவனே!

K S Srinivasan

அமுதன் வெள்ளி கருடன், திருக்குடந்தை.


Photo courtesy : Kesavabashyam Vn 

கிடந்தது நாகணைமேல்! போந்தது கலுழன்மேல்! 
நடந்தது ஞாலத்துள்! நின்றதென் இதயத்தே! 
குடந்தைக் கிடந்தான் அடியே துணையாய் 
அடைந்தேன்! அவனெனை ஆட்கொளுமாறே! 

K S Srinivasan

Monday, February 8, 2016

The Divine Union.


a20

Photo courtesey : Kazhiyur Varadhan.

காவிரிதான் அந்த விரஜையோ? மேன்வைகு 
கோவில் அரங்கம் பரம்பதமோ? -- தேவன் 
பரவாசு தேவன்தான் நம்அரங்கன் ஆமால் 
பரமபதம் இங்கலால் எங்கு?

--கி.ஸ்ரீர. ஸ்ரீ.