பாற்கடல் பள்ளிஎன் தாழ்த்ததோ ? பாரின்மேல் நாற்றிசையும்
நோற்றுயர் கௌசிகன் பள்ளி உணர்த்த கண்ணுற்றீர் அஃதும்
ஆற்றலம் பொய்யுறக்கம் தொடர்தர ஐயநீர்! உற்றுப்
பெற்றது நற்றவள் நம்அன்னை! கோதைதன் மடியிறே !
அருள்வடிவாம் நிறைவடிவே!
திருவுடைப் பெருமாளே!
குறைஉடை சிறுவடியேன்
பெறவிழைஉம் திருவடியே!
பெரியாழ்வார் நந்தவனக் கிளியே!
தெரியேன் வினைஅறவே களைவாயே!
வரியே னுக்அருள் செயவே!போய்
உரித்தாய் மொழிஅவள் கைகிளியே!