Sunday, October 25, 2015

தசாவதாரம் :

தசாவதாரம் :

பவ்வம் பெருவெள்ளம் மண்டியுண்ட காலம்,மீன்
அவ்வுருவ மேற்று மறைநான்கும் -- எவ்வுயிரும்
யாவும் ஒருநாவாய் போல்காப்பார் நோக்கது
மேவல் உலகம்   செலவு!

வானமுதம் தேவர்க்கு செய்தபோது மந்தரம்
தானாக தாழல் தடுப்பஆமை -- ஆனான்!
அதுகொண்டு ஐபுலனும் அ ஃகாது தன்னடக்கி 
ஈதுசெய்வார் உய்யப் பெறும்! 

தரணியை ஓர்நாள் அளரில் ஒளிப்ப  
இரணியன் முன்னோன் துணிந்தான்! -- காரணி!தான்
கேழலாய்த் தோற்றி இடந்தான்! அவர்துதித்து
வாழலாம் வையத் தினிது!

அண்ணனைக் கொன்றான் எனஅரியை நிந்தித்து
விண்ணவர்  மன்னன் சிறைசெய்தான் -- வாணாள்
கெடமால் அரியுருக் கொண்டவனை மாய்த்தான்!
நெடுமால் அழையா வரும்!

இந்திரன் தம்பியாய் தேவ ருலகுமீட்ப
சுந்திர நல்குறளாய் மாவலியை -- தந்திரம்
செய்தான்! பெருகிமண் கொண்டமால் வித்தகற் 
குய்ந்தார் சிறுமா மனிசர்!

தந்தைசொல் மிக்கதோர் மந்திரம் இல்லையென்
அந்தசொல் காக்கவே தோற்றினான்! -- தந்தையைக்
கொன்றான் எனகார்த்த வீர்யனை மாய்த்தவீரன்
அன்றோ பரசுரா மன் !

மூத்தோன் பணித்தன பின்னவர் ஆற்றுகை
சாத்திரம் சொன்னவை நேர்வதூம் --  அத்திறம் !
நேர்வழிக் காணில் குரக்கவை கேளீராய்
சேர்வழி  ராமன் மொழி.

உழவர் மழுவே பலமா யமுனை
பழகும் வழியை வளைத்த -- அழகன்
பலராமன்! நோற்று உலகம்  தமருள்
கலந்த உயர்சக்தி ஓம்பு!

நேர்படச் செல்லில் நிறைவு! உலகிது
பாழ்படச் செய்வார் முடிப்ப, தான் -- தாழ்தர
தக்கார் துணைநீடி கீதை மொழிந்துயர்
மிக்கான்!நம் கண்ண னாம்  கண்?

கலிமுடித்து  மெய்ஞான மோனத் தவத்தார்
பொலிவுடைத் தானா கிருதயுகம் -- கோலும் !
வலியுடைக் கற்கியாம்!மற்றை அவதாரம்
ஞாலத்தூ டேநடந்த  ஞான்று!

 --கி. ஸ்ரீர. ஸ்ரீ.









No comments:

Post a Comment