Friday, October 30, 2015

பஞ்ச தசோத்பவேத் தேவம், நாராயணம்.

வராஹாவதாரம் .

பிரமன் உலகு படைத்தற்காய் நேர
பெருவெள்ளம் பார்ஒளித்து  நீரின் -- இருப்பமால்
கோல வராகமாய் கோட்டிடை மீக்கொணர்ந்தான்!
ஞாலத் துயிர்நடையல் என்று!
 
கபிலாவதாரம்.

சாக்கிய யோக நெறிதந்து  தாய்க்குத்தாம்
ஆக்கிய  யாவும் அருள்குருவாய் -- வாக்கில்
உயர்முனி கீழுலகம் காக்கும் கபிலமுனி
தூயநெறி தந்தமால் ஓம்பு!

மத்ச்யாவதாரம்.

சத்ய விரதன் வியப்ப உலப்பிலா
சக்தி பெருகி கடல்சேர் -- உத்திசெய்மால்
மீன்எனப் போந்தனாய் ஊழிபுக ஓடமதை 
தான்நல்கி காக்கும் உலகு!


கஜேந்திர மோக்ஷம். 

பூக்கொய்து கூவி களிறு அழைப்பஅக்
கூக்குரல் கேட்டலும் தண்ணளி -- மீக்கொடு
ஓர்பறவை ஊர்ந்துவண் சக்கரக் கையான்!அன்
நீர்புழுவை மாய்பனே பாய்ந்து!

தத்தாத்ரேயர் அவதாரம் :

மறைநான்கும் நாயென மேவ மிளிர்கைகள்
ஆறும் வலம்புரி சங்காழி -- நேறும்!
உடுக்கையோடு சூலம் கமண்டலு மாலா
பிடித்தவதூ  தர்கீதை ஓது!

நர-நாராயணாவதாரம் 

எட்டெழுத்து மந்திரம்! பிறப்பறுத்துத் தந்திடும்!!
ஒற்றைச்சொல் ''ஓம்''இதன் கூற்றதாம் -- மற்றைசொல்!
நாரணன் தாமே குருவும்நல் சீடனாய்த்
தேர்ந்த வதரிமேல் வாக்கு!

ஹயக்கிரீவாவதாரம்.

செல்செல்வம் போலா கதேகல்வி! அக்கல்வி
அல்லா தவர்க்குநல்கி நீடுசெய்வான்! -- எல்லையில்
தொல்சீர் பரிமுகத்து ஞானப் பிரானவனே!
கல்லாதவ ராக்கும் கவி.

மோஹினி அவதாரம்.

அஞ்சிப் பிழைப்பராம் தேவரவர் வாணாளை 
விஞ்ச வளர்ப்பான் கடைந்திட்ட -- அஞ்சுவை
ஆரமுதை ஆங்கு அசுரர்க் களவிடாதே
நேர்ந்திட்டான் பெண்ணுருக் கொண்டு!

 ஹம்சாவதாரம்.

பொய்யா  மறைவிரித்தான் ஆதி சதுமுகற்கு
உய்ய உலகு படைத்தற்காய் -- ஐயன்மால்!
அம்சிறகாள் அன்னமதாய் ஆற்றும் அவதாரம்
தம்சிறந்த நீர்மையுள் நின்று !

வியாஸாவதாரம்.

மறைநான்கும் முன்பின் எனவகுத்தான்! பன்னி
உரைத்தற்காய் பாரதம் கைசெய்து -- பாரில்
நெறிசெய் புராணம் அறுமூன்றும் ஈந்தமாலாய்த் 
தேறும் வியாசர் வணங்கு!

புத்தாவதாரம்.

விரிசடை வானவர்  ஈசன் திரிபுரம்
போரிடை புக்கு சிரிப்பான் -- எரித்த
புகழதும் மால்கள்ள வேடம் கொடுபுத்தன்
மோகமெழு வித்த விளைவு!

அர்தநாரீஸ்வரன்.

தேவர்ப் பெரியமால் தோளில் வலம்கோவில்
மேவு திருவும் அக்கொப்பூழ் -- பூவில்
அணையும் அயனும் இடபால் உமையாள்
துணையும் திகழ்திருமால் மிக்கு! 

ஸு கமுகா தம்ருதம் ஸ்வயம்.

வியாசர் பணித்தநல் பாகவதத் தாள்வேன் 
புயல்நிற வண்ணன்நம் கண்ணன் -- முயலுமெனக் 
கூறி  விடைகொண்டான் தன்னுடைச் சோதி! 
அறிவார்க் கதுஅவன் கோ  யில்!

ஆழ்வாராக  அவதாரம்.

காரி உடையநங்கை கோறித ஓர்வரம் 
பாரில் தமக்கு மகனொருவன் --தாருமென 
ஓவ ''பெரியன் '' எனவாய் அவாவியே 
மேவினான் ஆதிநாதன் தான்! 

இளையாழ்வாராக  அவதாரம்.

தாமெல்லை என்றிருந்த பார்மன்னர்  வீழ்ந்தவிய 
மேனெல்லை  பாரதத்தை ஆள்வித்தான்! -- தாளெல்லை 
என்று  தவத்தால்தம் மொப்பதோர் சேய்வேண்டத் 
தோன்றும் இளையாழ்வார் என்று!


--கி. ஸ்ரீர. ஸ்ரீ.

Tuesday, October 27, 2015

அண்ணன் பெருமாள், திருவெள்ளக்குளம்.


Photo courtesy - Vijay Apv.

வேட்டகம் நம்மின் கலியனுக்கு! நாட்டமும்
தேட்டமும் அத்தால் குமுதவல்லி -- மாட்டாய்,நம்
அண்ணன் பெருமாள் அவரடியார் ஆதரித்து
எண்ணம் சிறந்தார் இணந்து.

-- K S Srinivasan. 

Sunday, October 25, 2015

தசாவதாரம் :

தசாவதாரம் :

பவ்வம் பெருவெள்ளம் மண்டியுண்ட காலம்,மீன்
அவ்வுருவ மேற்று மறைநான்கும் -- எவ்வுயிரும்
யாவும் ஒருநாவாய் போல்காப்பார் நோக்கது
மேவல் உலகம்   செலவு!

வானமுதம் தேவர்க்கு செய்தபோது மந்தரம்
தானாக தாழல் தடுப்பஆமை -- ஆனான்!
அதுகொண்டு ஐபுலனும் அ ஃகாது தன்னடக்கி 
ஈதுசெய்வார் உய்யப் பெறும்! 

தரணியை ஓர்நாள் அளரில் ஒளிப்ப  
இரணியன் முன்னோன் துணிந்தான்! -- காரணி!தான்
கேழலாய்த் தோற்றி இடந்தான்! அவர்துதித்து
வாழலாம் வையத் தினிது!

அண்ணனைக் கொன்றான் எனஅரியை நிந்தித்து
விண்ணவர்  மன்னன் சிறைசெய்தான் -- வாணாள்
கெடமால் அரியுருக் கொண்டவனை மாய்த்தான்!
நெடுமால் அழையா வரும்!

இந்திரன் தம்பியாய் தேவ ருலகுமீட்ப
சுந்திர நல்குறளாய் மாவலியை -- தந்திரம்
செய்தான்! பெருகிமண் கொண்டமால் வித்தகற் 
குய்ந்தார் சிறுமா மனிசர்!

தந்தைசொல் மிக்கதோர் மந்திரம் இல்லையென்
அந்தசொல் காக்கவே தோற்றினான்! -- தந்தையைக்
கொன்றான் எனகார்த்த வீர்யனை மாய்த்தவீரன்
அன்றோ பரசுரா மன் !

மூத்தோன் பணித்தன பின்னவர் ஆற்றுகை
சாத்திரம் சொன்னவை நேர்வதூம் --  அத்திறம் !
நேர்வழிக் காணில் குரக்கவை கேளீராய்
சேர்வழி  ராமன் மொழி.

உழவர் மழுவே பலமா யமுனை
பழகும் வழியை வளைத்த -- அழகன்
பலராமன்! நோற்று உலகம்  தமருள்
கலந்த உயர்சக்தி ஓம்பு!

நேர்படச் செல்லில் நிறைவு! உலகிது
பாழ்படச் செய்வார் முடிப்ப, தான் -- தாழ்தர
தக்கார் துணைநீடி கீதை மொழிந்துயர்
மிக்கான்!நம் கண்ண னாம்  கண்?

கலிமுடித்து  மெய்ஞான மோனத் தவத்தார்
பொலிவுடைத் தானா கிருதயுகம் -- கோலும் !
வலியுடைக் கற்கியாம்!மற்றை அவதாரம்
ஞாலத்தூ டேநடந்த  ஞான்று!

 --கி. ஸ்ரீர. ஸ்ரீ.









Saturday, October 24, 2015

பேயாழ்வார், ஸ்ரீரங்கம்.



Photo courtesy - Vijay Apv

மயிலைப் பிறந்து திருவிளக்கை மற்றிருவர்
வேய திருக்கண்டேன் என்று --நயம்பட 
நாரணனை ஏத்துவார் மாமழிசை உத்தமரை 
ஆரணத்தாள் மாலுக்காய்த்  மாற்று!

மாமயிலை வந்து பிறந்து மாதவனை 
தூமொழி கொண்டு துதிக்க -- தாமே 
அறிந்து அதிசயித்தார் நாரணனை! அன்றி
நெறிசெய்தார் மாமழிசையார்!


--K S S Srinivasan.  

ஸ்ரீ ருக்மிணி கல்யாணம்.


Sri Rukmini Kalyanam depicted. Srirangam Koil Navaratri alankaram.

Photo courtesy -- Ramaswamy Narayanan.

சிசுபாலன் தேசழிய தேர்கடாவி தேவி
இசைய வதுவைநாள் வந்தார் -- திசைப்ப
உருப்பிணியை தன்தேசம் கொண்டொய்து செய்கை
திருந்த மணம்புணர்ந்தான் மால்!

-- K S Srinivasan. 

மாமுனிகள், திருவஹிந்திரபுரம்.



Photo courtesy - Kesava Bhashyam Vn.

இந்திர புரசுந் தரரே! உமதிருப்பால்
அந்த நகர்திரு வைகும்நல் -- இந்திர
புரம்என வாயித்தோ? மாமுனியே! நீடும்
வரம்வாழ்த்த வாய்மால் அடிக்கு!

--K S Srinivasan. 

பிள்ளை லோகாச்சாரியர்.

https://youtu.be/zTVWbcKF1Tc
 
(video by Kanakaraj kumar)
 

தேவாதி ராசன் உலகாரி யன்என
மேவி உரைத்த பொருளவை -- யாவும்
முதலாழ்வார் தொடங்கி அரங்கன் அணைவும்
எதிராசர் தாள்துணை என்று !

--K S Srinivasan. 

மாமுனிகள்.



Photo courtesy - Adiyen Elaiyazhwar Ramanuja Dasan.

பரமபதம் பாற்கடல் என்றிவை தொறும்
இருக்கை படுக்கை எனத்தான் -- இருந்தது
போதா தெனஇளை யாழ்வாராய் பின்விபவம்
அதோடுஅர்ச் சையிலுமாம் தொண்டு.

தொண்டு நிறைகொள மாமுனியாய் ஈண்டவர்
மீண்டு மயர்வற வாய்மொழிக் -- குண்டான
ஈடு பெருக்கலும் மாறன் அடிஎனவே
நாடு பெருமை அமைந்து!

--K S Srinivasan. 

பேயாழ்வார் அவதார கிணற்று தீர்த்தம்.



Photo courtesy - Venugopalachari Gopi Adyabagham Thiruvidanthai.

பிறந்ததன் ஊர்பிறந்த தன்னுடை வாவி
சிறந்ததாம் நீர்கொணர்ந்து நம்மின் -- அருந்தவத்த
தீர்த்தன் தமிழ்த்தலைவன் நீராட்டம் கொள்பயன்
தாழ்த்த நமைபுனித மாட்டு!

--K S Srinivasan.

வறுத்த பயறு முளைவிக்கும் மரகதவல்லித் தாயார்.



Photo courtesy - Kesavabashyam Vn.

ஒருகுறளாய் ஈரடிமண் வாமனனாய்ச் சென்று
தருகவென தாழ்த்தக் காலம் -- திருமார்பில்
தேவியை உத்தரியம் கொண்டு மறைத்தாய்!எம்
தீவினை தீரவின்று காட்டு.

--K S Srinivasan. 

Monday, October 19, 2015

Rush Towards Ramanuja - Pada sparsha @ Bangalore House in October 2013.


பரவாசுதேவன் பணித்தார் எனப்பாரின்மேல் வந்தார்
                பூதலத்தார் பொறைதீர பூதூரில் பிறந்தார் வந்தார்
அரவரசன் அனந்தன் என்பார் அங்குற்றிங்கு வந்தார்
               ஆளவந்தார் அருள்விழிக்கு இலக்காகி உலகாள  வந்தார்
கரிகிரிமேல் கண்ணாளர் ஆதரித்தன்பு செய்வார் வந்தார்
               காசினியோர்க்கு ''மால்தேய்வம்'' எனக்காட்டவே வந்தார்
திருவரங்கம் திருப்பதி சேர்ந்தினிது இருபார் வந்தார்
               திருமால் திருவடிக்கெமை சேர்விப்பார் வந்தார் தாமே!

-K S Srinivasan.


Sunday, October 18, 2015

Livermore Temple CA.

 

அழையா நுழைந்தாய் அடியேன் மனத்தகத்தே!
ஆழியம் கையனே! என்னே--எழிலார்
கலுழன்மேல் இங்குற்றாய் நீநிற்ற ஏழுமலை
போலா இளம்கோயில் நீத்து?

Saturday, October 17, 2015

மோகனக் கண்ணன்.

.
பின்னைக்காய் முன்னேழ் எறுது அடர்த்தான்தான்
என்னைஇக் கோலம் செயப்புகுந்தான்!-- பின்னைத்
தருவிருந்து ஊது குழல்வாய் மடுத்தாவி 
ஈரும்வகை ஆக இசைத்து.


Friday, October 16, 2015

நம்பெருமாளும், ஸ்ரீ ரங்கநாயகியும்.



Photo courtesy - Rangarajan Vazhaikombu.

இருவராய் வந்தார்!என் முன்னேகாண் நின்றார்!
உருகலா கல்மனதை தம்மின் -- அருளெனும்
கார்கொடு நீராய்க் கரைத்திட்டார்! யாரெனை
நேர்கொடு நேர்செய்தல் பாற்று?

--K S Srinivasan.
 

தமிழ்த் தலைவன் .


Photo courtesy - Gopi Adyabhagam.

முதலாழ்வார் மூவரும் கோவல் இடைகழி
போத புகுந்து நெறுக்குவனாம் --மாதவன் !
பெய்மழை கும்மிருட்டில் பாவிளக்கு ஏற்றமால்
ஐயன்தமைக் காணக் கொடும்!

--K S Srinivasan.

Thursday, October 15, 2015

நவவித நாயகிகள்.



Photo courtesy - Ramaswamy Narayanan.

திருவரங்கம் மாவல்லி மாமயிலை கச்சித்
திருகடிகை தாமல் திருமால் -- திருவழகி
எவ்வுள் திருப்புட் குழிதிருச் சானூர்என்
றிவ்வூர் வகைவாழ்(ந்) திரு!

--K S Srinivasan.

கமலவல்லித் தாயார், உறையூர்.



Pictue courtesy - Ramaswamy Narayanan.

வாய்மை இலேன்!வரியார்க்கு  ஈந்தேனாம் வண்மையும்
தூய்மைத் துளியுமிலேன்! கீழான -- நாயினும்
நீசனேன் நின்னடைந்தேன் கமலை எனும்தாயே !
யோசனை விடுத்தெமைகை தூக்கு!

--K S Srinivasan.

 

Wednesday, October 14, 2015

பொய்கையாழ்வார்., திருவெஃகா



Photo courtesy - Kesvabashayam Vn.

வடமொழி வேதம் விளம்புமவை நெய்யா
திடமுடை நற்றமிழ் தன்நா -- இடுதிரியா
ஆரண நல்விளக்கு நன்னாக ஏற்றினான்
நாரணர்க்குச் செய்யிருள் பொய்த்து!

--K S Srinivasan.

கோதாவரி



சீதா அவள்கவர்தல் காண்டும் தான்வாளா
கோதா வரிமௌனித் தாள்!ராமற் -- கேதும்
உரைத்திலாள் பாபம் கழியப் புனைந்தாள்
நிறைபுகழாள் கோதைதன் பேர்!

--K S Srinivasan.

 

பெரியாழ்வார்.

 
Photo courtesy - Sri Sampath.

தன்னைத் ஒருத்துத் தவிர்ந்து,அத் தாமரையாள்
அன்பன் ஒருவனுக்கே முப்போதும் -- இன்பா
மொழிதலும் பல்லாண்டு ! அப்பெரி யாழ்வார்
வழிவகையே எம்மனோர்க்கும் சால்பு!

--K S Srinivasan.
 

ஸ்ரீ ரங்க நாச்சியார்.


Photo courtesy - Vakulabharanan Kesvan.

தாயே! உனைக்காணல் என்னே எனதவிப்ப
நீயேவந் தென்கண்முன் நின்றாய்!உன் -- சேய்நான்
எனவறிந்தும் நாயேன் தொழதடை உண்டோ?
மனமுவந்து வேட்டுமிதைக் கூட்டு!

--K S Srinvasan.

நம் இல்லம் வளர் பிள்ளை.



எண்ணில் வரும்!ஏழை ஏனும் அவர் இல்லம்
தன்னில் வரும்திண்ணம் நம்கண்ணன்! -- உண்மையில்
அன்னவர் பண்ணும் பகட்டுக் கலாதவர்
அன்பும் எளிவும் பொருட்டு.

--K S Srinivasan.

Tuesday, October 13, 2015

கலாபகால பொன்னரங்கர்



Photo courtesy :Ramaswamy Narayanan.

வெள்ளை உடுத்தய்யன்  எல்லில் பிழைப்பத்தான்
கள்ளமே  காஷாய மேவினான்,அவ் -- வொள்ளிய 
ஆழ்வானைப்  போலே  அரங்கன் உலாயிருப்பச் 
சுழ்கலாப காலச்செல் வன்.

--K S SSrinivasan.



Sunday, October 11, 2015

கீர்த்தனை

https://www.youtube.com/watch?v=Xvj_zSaQfOg

சொல்லில் சுருக்காய் சுருதி ப் பொருளென
எல்லா வரமும் தரும்சுர பி -- அல்லவே?
ராம! நின் நாமம் நயம் பட நானுரைக்கில்
ஆமே சுதைத்தேன் எனக்கு!

--K S Srinivasan.


பராங்குச முனியும் இராமனுச முனியும்.


Photo courtesy - Ramanujam RS

வாழி எதிராசன்! வாழி பராங்குசன்!
வாழி எதிராசர் நற்றாள் -- தொழும்நம்
குருவர மாமுனி! நிச்சலும் ஏற்றுமவர்
கூறுகலை கோயின்மைப் பட்டு!

--K S Srinivasan.
 

திருவரங்கம்

https://www.facebook.com/Dinamalardaily/videos/1052208494811727/

செயலில் செலக்காணா தென்னரங்கன் கோயில்
அயலில் அடியேன் மனமாழ் -- பயனாய்
வரக்கண்டேன்! நாளும் மகிழ்வெய்து வேனாய்த்
திருக்கண்ட தெய்வத் தரசு!

--K S Srinivasan.

 

Saturday, October 10, 2015

ஐதைந்தும் ஐந்தும் :

ஆசார விசாரங்கள் ;-
1. (மிக்க) இறை நிலை.
2. (மெய்யாம்) உயிர் நிலை.
3. (தக்க) நெறி.
4. (தொக்கியலும்) தடை.
5. (வாழ்வினை) பேறு.
இறை நிலை :
1. பரம்.
2. வியூகம்.
3. விபவம்.
4. அந்தர்யாமி.
5. அர்ச்சை.
உயிர் நிலை :
1. ஸ்தாவரங்கள்.
2. திர்யக்கு - பறப்பன, ஊர்வன, நடப்பன.
3. மனுஷ்யர் - புபுக்ஷுகள் , முமுக்ஷுக்கள் 
4. தேவ, கந்தர்வ, யக்ஷர்கள் .
5. ஸூரிகள் - நித்ய, முக்தர்கள்.
நெறி :
1. கர்ம யோகம்.
2. ஞான யோகம்.
3. பக்தி யோகம்.
4. சரணாகதி.
5. ஆசார்ய நிஷ்டை.
தடை :
1. ஞான அனுதயம்.
2. அக்ஞானம்.
3. அந்யதா ஞானம்.
4. விபரீத ஞானம்.
5. விஸ்ம்ருதி.
வாழ்ச்சி :
1. ஸ்வார்த்த - பகவத் கைங்கர்யம்.
2. பரார்த்த- பகவத் கைங்கர்யம்.
3. ஆசார்ய கைங்கர்யம்.
4. ஆசார்ய ருசி பரிக்ருஹீத பகவத், பாகவத கைங்கர்யம்.
5.. பகவத் ருசி பரிக்ருஹீத பாகவத ஆசார்ய கைங்கர்யம்.
பிரமாணம் :
1. வேதம், உபநிஷத்துக்கள்.
2. இதிஹாஸ, புராண, ஸ்மிருதிகள்.
3. ஆகம, பகவத் வசனக்கள்.
4. ஆழ்வார்கள் பாசுரங்கள்.
5. ஆசார்ய ஸ்ரீசூக்திகள்.
பிரமேயம் :
1. (பரவாசு தேவனாய்) இருந்தான்.
2. (க்ஷீராப்தி வாசனாய்) கிடந்தான்.
3. (ராம, கிருஷ்ணனாய்) நடந்தான்.
4. (ஹார்த்த ரூபியாய்) மறைந்தான்.
5. (அர்ச்சா சமாதியில்) நின்றான்.
பிரமாதா :
1. பகவான் - திருமந்திரம், துவயம் வெளியிட்டது.
2. வேதமாதா - பிரம்ஹ சூத்திரம்.
3. ருஷிகள் - பராசர, பாராச்சர்யா வசநங்கள்.
4. ஆழ்வார்கள் - திவ்யப் பிரபந்தம்.
5. ஆசாரியர்களின் - ஸ்தோத்ரங்கள்.
வேதம் :
1. கர்ம காண்டம் - மந்திர விதி, பிரயோகங்கள்.
2. ஞான காண்டம் - உபநிஷத் பிரஹ்ம பாகம்.
3. வேதாங்கங்கள் ஆறு.
4. வேத உபாங்கங்கள் நாலு.
5. பிரஹ்ம சூத்திரம்.
இதிஹாசம் இத்யாதி :
1. ஸ்ரீ ராமாயணம் ( ராம சரம ஸ்லோகம் )
2. வியாச பாரதம் ( கிருஷ்ண சரம ஸ்லோகம்).
3. ஸாத்விக புராணங்கள் ஆறு ( வராக சரம ஸ்லோகம்).
4. பாகவதம் (உத்தவ கீதை).
5. மநு, யாக்ஞ்யவல்கிய ஸ்மிருதிகள்.
ஆகமங்கள் :
1. வைகானச ஆகமம்.
2. பாஞ்சராத்ர ஆகமம்.
3. நாதமுனிகள் பிரவர்திப்பித்த அஷ்டாங்க யோகம்.
4. ஆகம யந்திர-தந்த்ரப் பிரயோகங்கள்.
5. இராமானுஜ திவ்யாக்ஞா என்கிற கோயிலொழுகு.
ஆழ்வார் பாசுரங்கள் :
1. நம்மாழ்வார் - 4 வேத சமமான நான்கு பிரபந்தங்கள்.
2. திருமங்கை ஆழ்வார் - 6 வேதாங்கங்களுக்கு ஈடான ஆறு பிரபந்தங்கள்.
3. இதர ஆழ்வார்கள் - வேத உபாங்கங்களுக்கு நிகரான ஏனய ஆழ்வார் பாசுரங்கள்.
4. ஈடு பெருக்கு.
5. பெரியவாச்சான் பிள்ளையின் 4000 பாசுர வியாக்கியானங்கள்.
ஆசார்ய ஸ்ரீசூக்திகள் :
1. ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னம், சதுஸ் ஸ்லோகி.
2. பகவத் ராமானுஜரின் நவரத்ன கிருதிகள்.
3. கூரதாழ்வான், பராசர பட்டர், ஸ்வாமி தேசிகர் ஸ்ரீ சூக்திகள்.
4. பிள்ளை லோகாசாரியரின் அஷ்டாதச ரஹஸ்யங்கள்.
5. ஸ்வாமி மணவாள மாமுனிகளின் ஸ்வபிரபந்தமும், வியாக்யானங்களும்.
பஞ்ச ஸம்ஸ்காரம் :
1. தாப : - சங்க சக்ர லாஞ்சனம்.
2. புண்ட்ர : - துவாதச ஊர்த்வ புண்ட்ர தாரணம்.
3. நாம - தாஸ்ய நாமக் கிரஹணம்.
4. மந்த்ரம் - திருமந்திர, துவய, சரம ஸ்லோக அநுச்சாரணம்.
5. யக்ஞம் - திருவாராதன பகவதாராதனம்.
யக்ஞம் :
1. தேவ யக்ஞம் - அக்னிஹோத்ரம்.
2. பூத யக்ஞம் - பசு, பக்ஷி சம்ரக்ஷணம்.
3. மனுஷ்ய யக்ஞம் - அதிதி ஸத்காரம்.
4. ஐயம் - பிரம்மச்சாரிகளுக்கு இடும் பிக்ஷை.
5. பிச்சை - சன்யாசிகளுக்கு இடும் அமுந்த்ரி.
திருவாராதனம் : பஞ்ச கால பராயணம் :
1. விடிஹோரை (அருணோதய காலம்) - ஸுப்ரபாதம்.
2. காலை (சூர்யோதய காலம்) - ஆசனம், ஸ்நானம், அலங்காரம், மந்திர புஷ்பம்.
3. மதியம் (உச்சி காலம்) - போஜ்யம்.
4. சாயும் (சந்தியா காலம்) - காப்பு.
5. முன் இரவு (சயன காலம்) - பர்யங்காசனம்.

மந்திரத்திலும் மந்திரத்தில் உள்ளீடான வஸ்துவிலும் பிரேமம் கனக்க உண்டானால் கார்யகரமாவது என்கிற வசனத்துக்குச் சேர இவற்றில் அநுசந்தான, அநுசந்தேய பஞ்சகங்களாக தேறுமவை :
அநுசந்தான மந்திரம் :
1. திருமந்திரம்.
2. துவயம்.
3. சரம ஸ்லோகம்.
4. ரானுஜபரமான திருமந்திரம், துவயம்.
5. ஆச்சார்ய குருபரம்பரை.
மந்திரத்தில் உள்ளீடான அநுசந்தேய வஸ்து :
1. சதுரக்ஷரி.
2. ச்ரயப்பதி.
3. மூன்றெழுத்து உடைய பேர்.
4. சதுரா சதுரக்ஷரி.
5. திருமந்தரப் பிரதனான ஸ்வாசாரியன் .
சரமோபாய நிஷ்டனுக்கு 
1. வஸ்தவ்யம் - ஆச்சார்ய, ஸன்நிதி. ததலாபத்தில் பகவத் ஸந்நிதி.
2. வக்தவ்யம் - ஆசார்ய வைபவமும், ஸ்வநிகர்ஷ சமுச்சயங்கள்.
3. ஐப்தவ்யம் - குருபரம்பரையும், துவயமும்.
4. கர்த்தவ்யம் - ஆசார்ய கைங்கர்யமும், பகவத்  கைங்கர்யமும்.
5. பரிகிராஹ்ய, பரிதியாஜ்யங்கள் - பூரவாசார்ய வாக்கும்வழியும் மற்று     
    அவைஷ்ணவ சகவாசமும், அபிமானமும்.
-- இவை ஐதைந்தும் ஐந்தும் அறியாத மானுடரை வையம் சுமப்பதும் வம்பு.
--இவை ஐதைந்தில் கடைநிலை ஸ்ரீ வைஷ்ணவனுக்கு சரமோபாய நிஷ்டனாகை அவஸ்யாபேக்ஷதம்.
--கி. ஸ்ரீர. ஸ்ரீ.

Thursday, October 8, 2015

அஷ்டதள பக்தி புஷ்பாஞ்சலி.




 
 
 
 
 
courtesy - Pandit Sridhar Mishra.

கொல்லாமை! உட்புலன் அன்றி வெளிப்புலன்
நில்லா தரிகெட்டுச் செல்லாமை! -- சொல்லாண்மை!
எல்லா உயிரிடத்தும் பொல்லாமை இல்லாநல்கல்
வல்லாருயர் ஞானத்துள் நின்று!

--K S Srinivasan.

Wednesday, October 7, 2015

நாதமுனிகள், காட்டுமன்னார் கோயில்.


Photo courtesy - Srivathsan Krishnan.

மேலான நாலா யிரம்நமக் கீந்த
தூயோனை! தேவ கான பண்இசைத்து --மாலோனை
மாயோனை பத்திமை காணும் உயர்யோக
நேயோனை வித்தகனை வாழ்த்து!
 
--K S Srinivasan.

சடகோபம்.

 
 Photo courtesy - T V Venkatesh.

வேதம் தமிழ்செய்த மாறன் மாலவனின் 
பாத  நிழல்என  நம்முடிக்காம் -- போதிற் 
கமலக் குடையாம்! பிறவிப் பிணிதீர்
அமலக் கறைவெளுக்கும் ஆறு!

--K S Srinivasan.

Tuesday, October 6, 2015

அகரம் (தென்னேரி) திருப்பதி.

1.
பொன்ஏர் பலவெழுதி இப்பொலன் நல்கொழிக்க
முன்ஏர் உழஉழுது பொன்குவிக்கும் -- தென்னேரித்
தண்பதிக்காய் நின்றானை! தாமரையாள் மார்வனை!
எண்குற்றார்க் கில்லை இடர்.

2.
இல்லை இடர்தான் நமக்கு! இலக்குமி
மல்கி அமர்கோயில்! மன்றதில் -- முல்லை
இருவாட்சி பூமணக்கும் தென்னேரி நின்று
அருளாட்சி செய்மால் அணைந்து.

3.
அணைவாம் அயன்அரன் வான்அம ரர்க்கும்!
துணைதான் திருமால் எவர்க்கும்! -- அணைந்தன்று
ஆனைக் கருள்மால் அணையுமித் தென்னேரி
வானமரும் முந்தையர் வீடு!
4.
வீடு உகந்தருள்மால் விண்ணோர் அவர்தலை!
நாடி மறைநான்கும் தேடி -- முடிக்கலா
தெய்வம் உறைவதூம்தென் ஏரி அகரத்துள்!
செய்குவான்  உய்வதாய் மெய்த்து!
5.
உய்யுமாறு மெய்யில் உணரும் ஒருவனை!
பொய்யர்க்குப் பொய்யனாய்  அற்றதற்றி -- மெய்யர்க்கு
மெய்யனாய் முந்துவான்! தென்னேரி நின்றருள்
பைந்துழாய் பாதத்தான் பற்று!
6.
பற்று எவர்க்குமாய்  முற்றும்  முதல்வனை!
பெற்று அகலுமோ? உற்றதாக் -- கற்றுளார்
நற்றமெய்தி ஆற்றலும் தென்னேரி ஒன்றதுள்
நிற்றமால் நெஞ்சுளே நோற்று!
7.
நோற்று நடமினோ மாலொருவன் பொன்னடிக்காய்!
ஏற்ற மதுவே நமனோர்க்கு! -- போற்றிப்
புகலும் புனிதனை! தென்னேரி யுள்போந்
தகலும் இனிஓர்  பிறப்பு!
8.
பிறவி முடித்து தொடரும் அடிக்காய் !
முறைமை அவன்பால் ஒழுகல் -- அறிவு!
எழிலார் திருமாலை தென்னேரி சேரத்
தொழுவார் விழைவரோ வீடு?
9.
வீடுமின் காயம் வினைவாய் முடித்து!
வீடுசெய் மாயன் மருவிஅணை -- வீடது
நாடலே நல்லறம்! தென்னேரி ஒன்றதுள்
தேடியாள் தெய்வத் தரசு!
10.
அரசும் அமரர்தம் வாழ்வும் இசைய
விரசுவான் போகம்யான் வேண்டேன்! -- அரிசினத்தன் 
ஆய்நீ  அகற்றிடினும் மீளேன் அடிக்கலால் !
தீயில் புடம்போட்ட பொன்!

--(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ  ரங்கன் ஸ்ரீநிவாஸ  தாஸன்.

Monday, October 5, 2015

போர்ப்பாகு செய்த தேர்பாகனார்க்கு ஒர்பாலுரைத்த தீர்த்தர்.


Photo courtesy - A K Varadarajan.

தானேமால் தானுமாய்  தன்னால் இவனுமாவான்
தானே இருவர் எனவாய், மா -- ஞான
வலையத்து தன்ஓத்து பின்விரித்தான்! கூறு
கலைக்கெல்லாம் கோயில் அவன் .

--K S Srinivasan.

Sunday, October 4, 2015

நரசிம்மர், திருவல்லிக்கேணி.


Photo courtesy - Vishnumayam.

முன்னை உபகரித்த கண்கால் செவியொடு
என்னின் உடல்படு ஆக்கையிது -- தன்னையான்
தன்பயன் போக்கி நின்னை மறப்பதும்
என்வினை யானே பொறுப்பு!

--K S Srinivasan.

ஸ்ரீ எம்பெருமானார், ஸ்ரீபெரும் பூதூர்.


Photo courtesy - Poonam Dwivedi.

முன்னை உபகரித்த கண்கால் செவியொடு
என்னின் உடல்படு ஆக்கையிது -- தன்னையான்
தன்பயன் போக்கி நின்னை மறப்பதும்
என்வினை யானே பொறுப்பு!

தேர்ப் பாகனார் உகந்த வாதப்போர் பாகனார் - 
சேர்த்திசைந்த நம்மின் வினைக்கோர் 
ஆர்ப்பழி - தீயில்பொறி சக்கரக் கையினார். 
வேர்ப்பற்றாய் தாட்பற்ற நமக்கோர் வாள்முதலே!


-- K S Srinivasan.


வரதராஜப் பெருமாள், ஆத்தூர்.


Photo courtesy - Vijay Apv.

காத்தல் அளித்தல் இவையுடை எம்வரத!
காத்தல் முறையுடை மு ப் படை -- யாத்த
கரம்மூன்றும் நும்மடியார் கேட்டு அளிக்கும்
கரம்ஒன்றும் என்ன கணக்கு?

-- K S Srinivasan.

திருப்பாணாழ்வார், உறையூர்.


Photo courtesy - Vakulabharanan Kesavan.

அரங்கன் பாதாதி கேசம் போற்றி
வரங்கள் ஏதும்தான் வேண்டாத -- திறன்நம்
அரங்கனும் மெச்சி திருவடி நீழல்
த௫ம்பாண் பெருமாள் பணிந்து!

-- K S Srinivasaan.

மாவிளக்கு மகிமை.

Image result for ttd images
Photo courtesy -- TTD, Tirupati.

திருமலை அப்பன் திருமகள் சேர
அருள்கை பொருளாய் வரும்நாள் -- திருநாள்
புரட்டாசி மாதத்து மாவிளக்கு நன்நாளால்
பாராட்டி பத்திமையோ டேற்று!

--K S Srinivasan.

பெருந்தேவித்தாயார், காஞ்சி.


Photo courtesy - Kesavabashyam Vn.

பேரரு ளாளன் பெருமைக்குத் தக்கநம்
பெருந்தேவித் தாயே! அறியாச் -- சிரியேனை
தேவாதி ராஜரவர் ஏலாமே தள்ளாது
ஆவா எனஇரங்க லாற்று!

-- K S Srinivasan.

பேரருளாளன்.


Photo courtesy - Kesavabashyam Vn.

பேரரு ளாளன்பே ரோதும் பெரியீரே!
சீராரும் கச்சித் திருவாளன் -- ஓரோர்
பொழுது திருச்சாத்தும் நாளும்நீர் நல்கல்
எழுது பொற்சித்திரம்நெஞ் சத்து!

-- K S Srinivasan.
 

தேவப்பெருமாள், காஞ்சி.


Photo courtesy - Kesavabashyam Vn.

யானே சமாதிகர் இல்லா இறைப்பொருள்!
யானே எமைஅடைய ஆறுமன்றி -- யானே
அடையும் பயன்நுமக்கு என்றயிவன் தாளே
அடைதலன்றி உண்டோ அயல் ?

--K S Srinivasan.

தேவப்பெருமாள், கோடாலிக் கொண்டை.


Photo courtesy - Kesavabashyam Vn.

அன்னை அவளருள் நோக்கதும் ''எற்றேனும்
சொன்னேன் உனக்காகது'' என்வர்தாம் -- இன்னிவன்
கோடலி கொண்டை அழகுகண் டோவுவர்
ஈடுண்டோ அன்னாள் குழல் ?

--K S Srinivasan.

கஜேந்திர மோக்ஷம்.


Photo courtesy - Thiruppullani Balaji.

பூக்கொடு கூவி களிறு அழைப்பஅக்
கூக்குரல் கேட்டலும் தண்ணளி -- மீக்கொடு
ஓர்பறவை ஊர்ந்துவண் சக்கரக் கையான்அன்
நீர்புழுவை மாய்பனே பாய்ந்து!

--K S Srinivasan.

தெள்ளிய சிங்கப் பெருமாள், திருவல்லிக்கேணி.


Photo courtesy - Kanakaraj Kumar.

அழகே ! அழகின் முதிர்தீஞ் சுவையே!
எழுமைநோய் தீர்க்கும் மருந்தே! -- எழிலே!
பழக வினிய பொருளே! நரசிங்கா!
ஏழையேன் ஈட்டஎன் கூட்டு!

--K S Srinivasan.

ஸ்ரீ.கோ.கா.வ. அண்ணாவிலப்பன் ஸ்வாமி.



Photo courtesy - Rangarajan Thathachariar

ஆனகட்டி போரடித்த நாடிதில் எட்டுதிசை
ஆனைஎன சீடர் படைகொடு -- தானுமோர்
ஆனைஎன வாழ்ந்த மணவாள யோகிதன்
தானை வரதகுரு வாழ்த்து!

--K S Srinivasan.

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன்.



Photo courtesy - Kanakaraj Kumar.

மாலை வெயிலில்வான் மஞ்சள் நிறம்காட்ட
ஆலய மின்தீ பம் சூடம் போல் -- தொலைவில்
கீழைநல் கோ புர வாயில் முகம்காட்ட
ஏழையெமக் கீதே பகல்.

--K S Srinivasan.

வேதாந்த வாசிரியரும், பிள்ளை லோகாசாரியரும்.


Photo courtesy - Kesavabashyam Vn.

உலகா ரியன்வழி என்ன புதிதா?
அலகிலா வேதாந்த வாசிரியர் -- கோலிய
கோட் ப் பாடு என்ன விலக்கா? இருவர்க்காய்
ஆட் ப் படுதல் அன்றோ இணக்கு?

--K S Srinivasan.

பெரிய பிராட்டி, ஸ்ரீரங்க நாச்சியார்.



Photo courtesy - Kinchitkaram Trust.

தன்னைத் தொழுவார்க்கு தன்அருள் தன்னாலே
முன்னை ப் பழவினை ப் பாற்றியவர் -- உன்னிற்
றெலாம்தருவாய்! வாநாடும் முன்தந்து மற்றை
கோலிற் றலாஎன் வருந்து !

--K S Srinivasan.