
யஸ்ய ப்ரஸாத கலையா பதிர: ஸ்ருணோதி பங்கு: ப்ரதாவதி ஜவேன வக்தி ச மூக: |
அந்த: ப்ரபச்யதி சுதம் லபதே ச வந்த்யா தம் தேவமேவ வரதம் சரணம் கதோஸ்மி ||
எந்த தேவப்பெருமாளின் அருளால் செவிடனுக்கு காது கேட்குமோ, நொண்டியானவன் நடப்பானோ, ஊமை பேசுவானோ, கண்ணிழந்தவன் பார்ப்பனோ, பிள்ளை பெறாதவள் பிள்ளை பெறுவளோ, அந்த தேவப்பெருமாளை நான் சரணம் அடைகிறேன் என்பது ஆளவந்தாரின் இந்த ஸ்லோகத்தின் திரண்ட கருத்து.
அதன் தமிழாக்கம் =>
வரதநின் கண்வீச்சு ஒன்றே தருமே
இரப்ப! செவிடன் கேட்கும் -- பரந்த
உலகிதில் மூகன் மொழியும் குருடன்
துலங்கக்காண் சேயாம் மலடு.
--கி. ஸ்ரீ. ஸ்ரீ.
இந்த ஸ்லோகத்தின் காட்டப்பட்ட அத்தனை விஷேஷனங்களும் ஸ்ரீ ராமானுஜரை குறிப்பதாக அமைந்திருப்பதை உணரலாம் என்று இதன் உண்மையான தாத்பர்யத்தை நம் ஆசார்யர்களும் பெரியவர்களும் கட்டயுள்ளனர்.
யார் தேவயற்ற வார்த்தைகளை கேட்கிறார்களோ அவர்கள் செவிடர்களுக்கு சமம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஸ்ரீ ராமானுஜர் கேட்ககூடாத அத்வைத மத பிரசங்கங்களை கேட்டுக் கொண்டிருந்த படியால் சத் சம்பிரதாய விஷயங்களை கேட்கும் வரை அவர் ஆளவந்தாருக்கு செவிடனாகவே தெரிந்தார். அவர் சத் சம்பிரதாயத்தின் ஆழ்பொருளை கேட்கவேண்டும் என்பது முதல் ப்ரார்த்தனை.
ராமானுஜர் ஒரே இடத்தில் இல்லமால் ஸ்ரீரங்கம் கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்ஷ்யாத்ரி சிம்மாசலம் என்று சொல்லும் படி எழுந்தருளி எல்லா திவ்யதேசங்களையும் மங்களாசாசனம் செய்ய வேண்டும் என்பது அடுத்த ப்ரார்த்தனை.
ராமானுஜர் ஊமை போலல்லாமல் வேதாந்த விஷயங்களையும் திருவாய்மொழி பொருள்களையும்விரித்து உரைக்க வேண்டும் என்பது அடுத்த ப்ரார்த்தனை.
ராமானுஜர் தன்னுடைய ஞானகண்ணால் வேதாந்த விஷயங்களை விசாரம் செய்து ஸ்ரீபாஷ்யாதி க்ரந்தங்கள் இயற்ற வேண்டும் எம்பது அடுத்த ப்ரார்த்தனை.
ஸ்ரீ ராமானுஜர் தனி ஒருவராக அல்லாமல் நிறைய சிஷ்யர்களை(சிஷ்யர்களாகிர பிள்ளைகளை) உருவாக்க வேண்டும் என்று இத்தனை விஷயங்களை சூக்ஷுமமாக ப்ரார்த்தித்தார்.
தேவப்பெருமாள் "வரம் தரும் மாமணிவண்ணன்" என்பதாலும் "பேரருளாளன்" என்பதாலும் ஆளவந்தாரின் ப்ரார்த்தனைகளை அப்படியே நிறைவேற்றி ஸ்ரீ ராமானுஜரை நம் சம்பிரதாய ப்ரவர்த்தகா சார்யராக ஆக்கியருளினார். ஆக, எம்பெருமானாருக்கு இவ்வளவு பெருமைகள் வாய்த்ததற்கு பேரருளாளனும் ஆளவந்தாருமே காரணம் எனலாம்.
-- Courtesy : Geethaacharyan Spiritual Magazine.
No comments:
Post a Comment