Photos Courtesy : Kesavabhasyam Vn.

நச்சு நாரணனை அச்சுதனை!
இச்சகத்து இணைஇலானை !
மெச்ச மகிழ்வானை என் மாலவனை !
எச்சில்வாய்க் கொண்டு ஏத்தினேனே!. -1

கற்ற கல்வி இற்றெனப் பற்றி
உற்ற போது உரப்ப உணர்த்தலும்
நிற்ற தூண் பிளந்த இரணியன்
முற்றும் வகைச் செற்ற வென்னப்பனே! -2

நாழிகை இதுவது என்றிலாது
வாழும் வகை வரம் வேண்டி
ஆழியானைப் பழிகொள விழைவானை
போழ்த்தானை பொழுதும் புலற்றுவனே. -3.

நாராயணா ! என்ற நின்நாமம் ஓத
யாரானும் தடிந்து தண்டிப்பரோ ? அஃதால்
நேராதன செய்தான் என்மகன் எனவே
ஓராதவனை ஓய்த்தானை நாளும் ஒழுகு. -4.
கல்லெனச் சமைந்தானைக் காணல் திறமோ ?
சொல்லில் சுருதியுள் சொல்லப் படுமவனை
இல்லை எனஇயற்றுவார் இருளடங்க முன்பு நீ
கல்லினில் தோற்றவும் ஆற்றுமோ பிணக்கினி ? -5

கானிடைக் கல்லதன் எறிந்தும், கைமா
ஆனுடைக் காலதால் இடர்ந்தும், ஆய்ந்த
கனலிடைக் காய்ப்பவும்,நாளும் நாமம்
நினதுடைப் பிள்ளையை பிள்ளை எனலாமே? -6

கள்ள உள்ளத்து இரணியனைக் காய
வெள்ள வெள்ளத்து அரிதுயில் அகன்றனை!
எள்ளித் தள்ள வந்தானை தம்பத்தும்
துள்ளி அள்ளம் செய்து அட்டனை அரியே!. -7
நின்ற நெடுந்தூண் நில்லா துதிர
மன்றில் மார்தட்டித் தூண் தொட்ட
ஞான்று, இரணியன் உளம் தொட்டுக்
கன்றிய கைக்கபயம் அவன்கால் பணிவார்க்கே!. -8

பிள்ளைவாய் அமுதத்தேறல் நின்நாமம் விடமென்றான
உள்ளம்தொட்டு இரணியன் உயிரை உண்டாய் !
கள்ளமுன் செய்கை! காயுமுன்நாமம் நோயதாமோ?
தெள்ளியசிங்கா ! தெளிகிற்கேன் தண்டனையும் அருளதாலோ? -9

அல்லில்கேணிக் கண்ணனை ! ஆழி கொண்டு
துல்லியம் போதில் துரகம் துளைத்தானை!
வில்லின் வலவன் ராமனை! நாகசயனைச்
சொல்லும் போதும் நரசிங்கா! என்பேனே. -10
-- தாசரதி தாஸன்,
கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன்.
No comments:
Post a Comment